சாம்பியன்ஸ் லீக் இருபது20

(சாம்பியன்சு இலீகு இருபது20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாம்பியன்ஸ் லீக் இருபது20 (Champions League Twenty20) என்பது இந்தியா, ஆத்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளின் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெற்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும்.[1] இத்தொடர் அப்போதைய ஐசிசியின் தலைவராக இருந்த என். ஸ்ரீனிவாசன் என்பவரால் நடத்தப்பட்டது.[2]

சாம்பின்ஸ் லீக் இருபது20
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வாரியம்
வடிவம்இருபது20
முதல் பதிப்பு2009
கடைசிப் பதிப்பு2014
தற்போதைய வாகையாளர்இந்தியா சென்னை சூப்பர் கிங்ஸ்
அதிகமுறை வெற்றிகள்இந்தியா மும்பை இந்தியன்ஸ் (இரு முறை)
இந்தியா சென்னை சூப்பர் கிங்ஸ் (இரு முறை)
அதிகபட்ச ஓட்டங்கள்இந்தியா சுரேஷ் ரைனா (842)
அதிகபட்ச வீழ்த்தல்கள்டிரினிடாட் மற்றும் டொபாகோ சுனில் நரைன் (39)
வலைத்தளம்http://clt20.com

உள்ளூர் இருபது20 போட்டித் தொடர்களின் வெற்றி காரணமாக, முக்கியமாக இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள் வெற்றி காரணமாக 2008இல் இப்போட்டித் தொடர் துவங்கப்பட்டது.[3] முதலாவது போட்டித் தொடர் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து 2008 அக்டோபர் முற்பகுதி வரை நடத்தப்படுவதாக இருந்தது.[4] ஆயினும் அது தாமதமானது. பின்னர், போட்டித் தொடர் திசம்பர் 3இலிருந்து திசம்பர் 10, 2008 வரை நடைபெறுவதாக இருந்தது.[5] பின்னர், நவம்பர் 2008இல் நடைபெற்ற மும்பைத் தாக்குதல்கள் காரணமாகப் போட்டித் தொடர் கைவிடப்பட்டது.[6]

முதலாவது போட்டித் தொடர் அக்டோபர் 2009இல் நடைபெற்றது. 170 கோடிக்கு (38.4 மில்லியன் அமெரிக்க டாலர்) விளம்பர ஆதரவு வழங்குவதற்கான உரிமையை இந்தியாவின் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான பார்த்தி ஏர்டெல் வாங்கியது.[7] 2011 போட்டித் தொடர் இந்தியாவில் செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை நடைபெற்றது.[8] ஆகத்து 2011இல் நோக்கியா நிறுவனம் நான்கு வருடங்கள் விளம்பர ஆதரவு வழங்குவதாக ஒப்புக் கொண்டது.[9]

குறைவான பார்வையாளர்கள், ரசிகர்களின் ஆர்வமின்மை, நிலையற்ற விளம்பர ஆதரவுகள் உள்ளிட்ட காரணங்களால் இத்தொடரை உருவாக்கிய மூன்று துடுப்பாட்ட வாரியங்களும் தொடரைக் கைவிடுவதாக அறிவித்தன.எனவே 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் இதன் கடைசித் தொடராக அமைந்தது.[10]








போட்டி முடிவுகள் தொகு

ஆண்டு நடைபெற்ற நாடு இறுதிப்போட்டி அணிகள் மேற்.
நிகழ்விடம் வெற்றியாளர் முடிவு இரண்டாமவர் குழு மொ.
2008   இந்தியா சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை நவம்பர் 2008 மும்பை தாக்குதல்கள் காரணமாகக் கைவிடப்பட்டது 8 [11]
2009   இந்தியா ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்   நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ்

159/9 (20 நிறைவுகள்)

41 ஓட்டங்களால் வெற்றி
ஆட்ட விவரம்
  டிரினிடாட் மற்றும் டொபாகோ

118 (15.5 நிறைவுகள்)

12 [12][13]
2010   தென்னாப்பிரிக்கா நியூ வான்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க்   சென்னை சூப்பர் கிங்ஸ்

132/2 (19 நிறைவுகள்)

8 இழப்புகளால் வெற்றி
ஆட்ட விவரம்
  வாரியர்ஸ்

128/6 (20 நிறைவுகள்)

10 [14][15]
2011   இந்தியா சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை   மும்பை இந்தியன்ஸ்

139 (20 நிறைவுகள்)

31 ஓட்டங்களால் வெற்றி
ஆட்ட விவரம்
  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

108 (19.2 நிறைவுகள்)

10 13 [16][17]
2012   தென்னாப்பிரிக்கா நியூ வான்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க்   சிட்னி சிக்சர்ஸ்

124/0 (12.3 நிறைவுகள்)

10 இழப்புகளால் வெற்றி
ஆட்ட விவரம்
  ஹைவெல்ட் லயன்ஸ்

121 all out (20 நிறைவுகள்)

10 14 [18]
2013   இந்தியா பெரோசா கோட்லா அரங்கம், டெல்லி   மும்பை இந்தியன்ஸ்

202/6 (20 நிறைவுகள்)

33 ஓட்டங்களால் வெற்றி
ஆட்ட விவரம்
  ராஜஸ்தான் ராயல்ஸ்

169 (18.5 நிறைவுகள்)

10 12 [19]
2014   இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்   சென்னை சூப்பர் கிங்ஸ்

185/2 (18.3 நிறைவுகள்)

8 இழப்புகளால் வெற்றி
ஆட்ட விவரம்
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

180/6 (20 நிறைவுகள்)

10 12 [20]

மூலம்: Cricinfo [21]

இதையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
  3. சாம்பியன்சு இலீகு துடுப்பாட்டம் தொடங்கப்பட்டது (ஆங்கில மொழியில்)
  4. சாம்பியன்சு இலீகில் மிடில்செக்சு (ஆங்கில மொழியில்)
  5. ["சாம்பியன்சு இலீகு இருபது20 திசம்பருக்கு மாற்றப்பட்டது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21. சாம்பியன்சு இலீகு இருபது20 திசம்பருக்கு மாற்றப்பட்டது (ஆங்கில மொழியில்)]
  6. சாம்பியன்சு இலீகுக்கு அக்டோபர்த் திகதி (ஆங்கில மொழியில்)
  7. சாம்பியன்சு இலீகு இருபது20இற்கு பார்த்தி தலைப்பு ஆதரவு வழங்கும் (ஆங்கில மொழியில்)
  8. ["சாம்பியன்சு இலீகு இருபது20 2011 நிகழ்ச்சி நிரல்-சாம்பியன்சு இலீகு இருபது20 பந்தய ஏற்பாடுகளும் போட்டித் திகதிகளும் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2019-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21. சாம்பியன்சு இலீகு இருபது20 2011 நிகழ்ச்சி நிரல்-சாம்பியன்சு இலீகு இருபது20 பந்தய ஏற்பாடுகளும் போட்டித் திகதிகளும் (ஆங்கில மொழியில்)]
  9. சாம்பியன்சு இலீகிற்கு ஆதரவுகள் (ஆங்கில மொழியில்)
  10. "Champions League T20 discontinued". ESPN. 15 July 2015. http://www.espncricinfo.com/ci/content/story/898873.html. பார்த்த நாள்: 15 July 2015. 
  11. "Champions Twenty20 League 2008 Fixtures". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 4 January 2010.
  12. "Champions League expanded from eight to 12 teams". Cricinfo (ESPN). 24 May 2009. http://www.espncricinfo.com/championsleague/content/story/405848.html. பார்த்த நாள்: 15 October 2009. 
  13. "Champions League: Brett Lee inspires New South Wales to victory over Trinidad". The Telegraph. 23 October 2009. https://www.telegraph.co.uk/sport/cricket/twenty20/6418930/Champions-League-Brett-Lee-inspires-New-South-Wales-to-victory-over-Trinidad-and-Tobago.html. பார்த்த நாள்: 13 June 2012. 
  14. "2010 Champions League T20 to have new format". Cricinfo (ESPN). 29 June 2010 இம் மூலத்தில் இருந்து 8 July 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100708013015/http://www.cricinfo.com/t20champions2010/content/story/465152.html. பார்த்த நாள்: 22 July 2010. 
  15. "India's Chennai Super Kings win Champions League final". BBC. 26 September 2010. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/9034909.stm. பார்த்த நாள்: 13 June 2012. 
  16. "Six-team qualifier for Champions League". Cricinfo (ESPN). 20 June 2011. http://www.espncricinfo.com/champions-league-twenty20-2011/content/story/519665.html. பார்த்த நாள்: 21 June 2011. 
  17. Datta, Dwaipayan (9 October 2011). "MI vs RCB: Mumbai Indians beat Bangalore to win 2011 Champions League Twenty20". The Times of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournaments/clt20/top-stories/MI-vs-RCB-Mumbai-Indians-beat-Bangalore-to-win-2011-Champions-League-Twenty20/articleshow/10291213.cms. பார்த்த நாள்: 13 June 2012. 
  18. "CLT20 from October 9-28, fourth IPL team gets direct entry". Cricinfo (ESPN). 3 July 2012. http://www.espncricinfo.com/champions-league-twenty20-2012/content/story/570875.html. பார்த்த நாள்: 26 July 2012. 
  19. "Harbhajan gives Mumbai the double". Cricinfo (ESPN). 6 October 2013. http://www.espncricinfo.com/champions-league-twenty20-2013/content/current/story/677199.html. பார்த்த நாள்: 6 October 2014. 
  20. "Raina century leads CSK to title". Cricinfo (ESPN). 4 October 2014. http://www.espncricinfo.com/champions-league-twenty20-2014/content/current/story/787219.html. பார்த்த நாள்: 4 October 2014. 
  21. "Series results". ESPNCricinfo. 14 April 2014.

வெளி இணைப்புகள் தொகு