சாம்முர் அமாத்

சாம்முர்-அமாத் (Sammur-amat) கி.மு 811-808 ஆண்டுக்காலத்தில் அசிரியாவை ஆண்ட அரசியாவார். அசிரிய அரசர் சம்சி-அடாட்டின் மரணத்திற்குப் பிறகு மூன்றாண்டுகள் ஆட்சி நடத்திய அரசி ஆவார். சில வரலாற்றாளர்கள் அவரது ஆட்சி கி.மு 809 முதல் 792வரை இருந்ததாகவும் கருதுகின்றனர்.[1][2]

சாம்முர் அமாத்
அசிரியா அரசி
ஆட்சிகி. மு 811 – கி. மு 808 அல்லது கி.மு 809 - கி.மு 792
முன்னிருந்தவர்சம்சி அடாட் V (823-811)
பின்வந்தவர்அடாட்-நிராரி III (810-783)]]
வாரிசு(கள்)அடாட்-நிராரி III]]
மாற்றுசாம்முரமாத்

சாம்முரமாத்தின் நினைவுக்கல் ஆசுர் என்ற இடத்தில் கிடைக்கப்பெற்றது. கலா என்ற இடத்தில் உள்ள ஓர் கல்வெட்டில் அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு தனது மகனின் முடிசூட்டல்வரை ஆதிக்கம் செலுத்தியதாக கூறுகிறது.

கிரேக்கர்களின் கற்பனை செய்த செமிராமிசின் உருவாக்கத்திற்கு, அசிரியர்களின் தரவுகளின் அடிப்படையில், இவரே உந்துதலாக இருக்கக்கூடும். இவரே கிரேக்க,பெர்சிய புராணங்களில் அசிரிய,ஆர்மீனிய,அராபிய,பெர்சிய,எகிப்திய மற்றும் ஆசியாவை நாற்பது ஆண்டுகள் ஆண்டதாகக் குறிப்பிடப்படும், பாபிலோனை நிறுவிய செமிராமிசு என்போரும் உண்டு.அவற்றின்படி இவருக்கு ஆழமான தாவரவியல் அறிவும் வேதியியல் அறிவும் இருந்ததாக நம்பப் படுகிறது.பாபிலோனின் அழகிய தோட்டங்களை அமைத்து அங்குள்ள தாவரங்களிலிருந்து மணம் தரும் வேதிப்பொருள்களைப் பிரித்து நறுமண பொதிகளை தயாரித்ததாகவும் அவற்றை அழகிற்காகவும் முடி தொடர்புடைய நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தினார் என்றும் அவை பதிகின்றன. தற்கால நறுமண மருந்தியலுக்கு முன்னோடியாக விளங்கினார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்முர்_அமாத்&oldid=3356960" இலிருந்து மீள்விக்கப்பட்டது