சாம் வோல்ற்றன்

சாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன்) (Samuel Moore Walton, மார்ச் 29, 1918 - ஏப்ரல் 6, 1992) அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட் (Wal-Mart) மற்றும் சாம்ஸ் கிளப் (Sam's Club) ஆகியவற்றின் நிறுவனர். வோல்ற்றன் குடும்பமே உலகின் மிகவும் பணக்காரக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1] படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.

சாமுவேல் மூர் வால்ட்டன்
பிறப்பு(1918-03-29)மார்ச்சு 29, 1918
கிங்பிசர், ஓக்லகாமா
இறப்புஏப்ரல் 5, 1992(1992-04-05) (அகவை 74)
பணிமுன்னாள் தலைவர், வால் மார்ட்
சொத்து மதிப்பு58.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (1992 போர்ப்ஸ் 400), $128.0 பில்லியன் (2008), Wealthy historical figures 2008-இன் படி.

சான்றுகள் தொகு

  1. Daniel, Gross; Forbes Magazine Staff (August 1997). Greatest Business Stories of All Time (First ). New York: John Wiley & Sons, Inc. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-19653-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_வோல்ற்றன்&oldid=2302774" இலிருந்து மீள்விக்கப்பட்டது