சாரா பாய்சன்

சாரா டில் "சால்லி" பாய்சன் (Sarah Till "Sally" Boysen) (பிறப்பு மார்ச் 5, 1949) ஓகியோ பல்கலைக்கழகத்தின் உளவியற் பேராசிரியர் ஆவார்.[1] Boysen is a primate researcher and former Director of the Chimp Center at the university.[2] இவர் இடிசுக்கவர் இதழால் 50 அரிய பெண் அறிவியலாளர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[3]

சாரா பாய்சன்
பிறப்பு5 மார்ச்சு 1949 (அகவை 75)
வேலை வழங்குபவர்

இளம்பருவம் தொகு

பாய்சன் 1949 மார்ச் 5இல் சாந்துசுகியில் பிறந்தார்.[2] இவருக்கு இரு அக்காக்களும் இரு தம்பிகளும் உள்ளனர்.

ஆய்வுப்பணி தொகு

பாய்சனின் முதன்மை ஆய்வு சிம்பஞ்சிகள் பற்றியதாகும்.[4] இவர் 1983இல் ஓகியோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் சிம்பஞ்சி மையத்தில் ஒப்பீட்டு அறிதல் திட்ட்த்தை உருவாக்கினார்.[5] இவர் அறிதிறன், மொழியியல், நரம்பறிவியல் ஆகிய அறிவியல் புலங்களின் இணையுறவில் சிம்பஞ்சிகளின் அறிதல் திறமைகளை ஆய்வு செய்தார்.[3]

உளவியல் மைய முடக்கம் தொகு

ஓகியோ பல்கலைக்கழகம் 2006இல் இவரது அய்வு மையத்தை முடக்கிவிட்டது.[6] பல்கலைக்கழகம் இம்மையத்தைத் தொடர்வதற்கான வெளி உதவி ஏது கிடைக்கவில்லை என மைய உயர்செலவினத்தைக் காரணமாகக் கூறியது.அதோடு நில்லாமல், மையத்தில் இருந்த இரண்டு சிம்பஞ்சிகளை டெல்சாசு மாநிலச் சான் அந்தோனியோவில் உள்ள காப்பகத்துக்கும் மாற்றிவிட்டது.[7] இடமாற்றத்தால் அந்த இரு சிம்பஞ்சிகளும் இறந்துவிட்டன.[8] இவர் இதை எதிர்த்து பல்கலைக்கழகத்தின் மீது தொடர்ந்த வழக்கும் தோல்வி கண்டது.[9]

மேற்கோள்கள் தொகு

  1. "Sally (Sarah) Boysen". The Ohio State University. Archived from the original on 29 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Sarah Till Boysen". Muskingum University. Archived from the original on 5 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014.
  3. 3.0 3.1 "The 50 Most Important Women in Science". Discover. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014.
  4. "What are they thinking?". Scientific American. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014.
  5. "Sarah Boysen". Writers Net. Archived from the original on 5 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Vitale, Robert. "Chimp expert Sally Boysen reinvigorated five years after OSU shuts down her research center". The Columbus Dispatch. Archived from the original on 4 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Ohio State University Chimpanzee Center". Project R&R. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014.
  8. Grens, Kerry. "Judge to rule on chimp lawsuit". The Scientist. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014.
  9. "Dr. Sarah Boysen v. Dr. Karen Holbrook et al" (PDF). The Scientist. 2007. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_பாய்சன்&oldid=3583970" இலிருந்து மீள்விக்கப்பட்டது