சாருமதி ரகுராமன்

சாருமதி ரகுராமன் (Charumathi Raghuraman) என்பவர் ஓர் இந்தியக் கருநாடக இசை வயலின் கலைஞர்.[1][2]

சாருமதி ரகுராமன்
பிறப்புமும்பை, இந்தியா
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்இந்திய மரபிசை
கருநாடக இசை
தொழில்(கள்)மரபிசை வயலின் கலைஞர்
இசைக்கருவி(கள்)வயலின்
இணையதளம்www.charuraghu.com

இளமையும் பயிற்சியும் தொகு

சாருமதி ரகுராமன் கருநாடக இசைப் பாடகர் இரமா மற்றும் வி. இரகுராமன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த இவர் தனது தாயிடமிருந்து வயலின் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பின்னர் மும்பையில் டி. ஆர். பாலாமணியிடமிருந்து முறையான பயிற்சியைப் பெற்றார். 1995ஆம் ஆண்டில், டி. என். கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில், சாருமதி தனது 7 வயதில் அவரது சீடராக ஆனார்.[3] இவர் பி. எஸ். நாராயணசாமியிடமிருந்து கருநாடகக் குரல் இசையைப் பயின்றார். மும்பை சவேரியார் நிறுவனத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[4]

இவரது கணவர் அனந்த கிருஷ்ணன், மறைந்த பாலக்காடு ரகுவின் பேரன் ஆவார். இவரும் ஒரு மிருதங்க இசைக் கலைஞர் ஆவார்.[5]

இசை நிகழ்ச்சி தொகு

சாருமதியின் முதல் இசை நிகழ்ச்சியினை 1998-இல் டி. என். கிருஷ்ணனுடன் நிகழ்த்தினார். பின்னர் இவர் தனியாகவும் பிறருடன் இணைந்தும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.[4] இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல இசை விழாக்கள் மற்றும் நிறுவனங்களில் இவர் வயலின் இசைத்துள்ளார். சாருமதி, வூட்போர்ட் நாட்டுப்புற விழா, ஆத்திரேலியா, 2011 மற்றும் அமெரிக்க, சேக்ரமெண்டோ பில்ஹார்மோனிக் இசைக்குழு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.[4]

இசைப்பாணி தொகு

சாருமதியின் இசைத்திறன் ஒரு தூய ஒலி மற்றும் புத்திசாலித்தனமான உள்ளடக்கத்தின் அரிய கலவையை உள்ளடக்கியது.[6] இவர் வயலின் நுட்பத்தில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், குரல் நுணுக்கங்களை மெல்லிசையாக இசைப்பதிலும் திறமையானவர். சாருமதி வயலின் மற்றும் குரல் ஆசிரியரும் ஆவார்.

விருதுகள் தொகு

  • 2007 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 'சிறந்த இளம் வயலின் கலைஞர்'
  • 2001,2002,2004 மற்றும் 2006ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த வயலின் கலைஞர் விருது சென்னை இசைக் கலா மன்றம்[4]
  • கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது 2016[7]
  • 2013ஆம் ஆண்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் இசைக்கலைஞருக்கான 'இராமபத்ரன் நூற்றாண்டு விருது', டேக் கழகம், இந்தியா
  • சென்னை சுழற்சங்க 'இளம் சாதனையாளர் விருது'
  • சி. சி. ஆர் & டி, அரசு. இந்திய உதவித்தொகை (பத்து வயதிலிருந்தே)[4][8][9][10][11][12]

மேற்கோள்கள் தொகு

  1. "Charumathi Raghuraman". Bengal Foundation, Dhaka, Bangladesh, 2018. Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-10-20.
  2. "Grand Carnatic Musical Concert". The Austin Chronicle. Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-10-20.
  3. "Charumathi Raghuraman – Music & Moorings".
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Charumathi Raghuraman". CMC Melbourne. Archived from the original on 2018-04-29. பார்க்கப்பட்ட நாள் 2018-10-20.
  5. "Musically connected". 4 November 2019.
  6. BRAHMA GANA SABHA (15 December 2006). "Commendable technique". தி இந்து. Archived from the original on 10 November 2018.
  7. "Two musicians receive Kalki award". The Hindu. 22 September 2016.
  8. "Ramakrishnan Murthy (Carnatic Vocal) with Charumathi Raghuraman (Violin) Manoj Siva (Mridangam)". Indian Music Society of Minnesota. Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-10-20.
  9. "92nd Annual Conference and Concerts 2018". The Music Academy, Madras. Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-10-20.
  10. "Charumathi Raghuraman (Violin)". ChennaiEvent.com.
  11. "Charumathi Raghuraman - Solo Violin Concert". Allevents.in, Chennai ›. Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-10-20.
  12. "ARTery Lamplit Series – Charumathi Raghuraman & Anantha R. Krishnan". The ARTery - Curating Creativity. Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-10-20.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருமதி_ரகுராமன்&oldid=3920317" இலிருந்து மீள்விக்கப்பட்டது