சாரு சந்திர பிஸ்வாஸ்

இந்திய அரசியல்வாதி, வழக்கறிஞர்

சாரு சந்திர பிஸ்வாஸ் (Charu Chandra Biswas) (இந்தியப் பேரரசின் ஆணை) (21 ஏப்ரல் 1888 - 9 டிசம்பர் 1960) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியாவார்.

சாரு சந்திர பிஸ்வாஸ்
சட்ட அமைச்சர்
பதவியில்
1952–1958
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்அம்பேத்கர்
பின்னவர்அசோக் குமார் சென்
மாநிலங்களவைத் தலைவர்
பதவியில்
பிப்ரவரி 1953 – நவம்பர் 1954
முன்னையவர்என். கோபாலசாமி அய்யங்கார்
பின்னவர்லால் பகதூர் சாஸ்திரி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952-1960
தொகுதிமேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1888-04-21)21 ஏப்ரல் 1888
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா[1]
இறப்பு12 திசம்பர் 1960(1960-12-12) (அகவை 72)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுகாசினி பிஸ்வாஸ்
பிள்ளைகள்6 மகள்கள்
மூலம்: [1]

தொழில் தொகு

கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பிஸ்வாஸ் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏகாதிபத்திய பிரித்தானிய அரசாங்கம் 1931 பிறந்தநாள் மரியாதை பட்டியலில் இவரை இந்தியப் பேரரசின் (CIE) தோழனாக நியமித்தது. பிப்ரவரி 1940 இல், இவர் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பின்னர் 1949-50 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டார்..

இவர், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு 1952 முதல் 1960 வரை மேற்கு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953 முதல் 1954 வரை மாநிலங்களவியில் தலைவராக இருந்தார். இவர் மாநில அமைச்சராகவும், பின்னர் மத்திய சட்டம், சிறுபான்மை விவகார அமைச்சராகவும் இருந்தார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. T. V. Rama Rao; G. D. Binani (1954). India at a Glance: A Comprehensive Reference Book on India. Orient Longmans. பக். 17. https://books.google.com/books?id=2b9NOnb8WigC. 
  2. "Previous Members Biography Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
  3. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரு_சந்திர_பிஸ்வாஸ்&oldid=3924957" இலிருந்து மீள்விக்கப்பட்டது