சாலகம் கருநாடக இசையின் 37வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 37வது இராகத்திற்கு சௌகந்தினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம் தொகு

 
சாலகம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம21 ரி1
  • 72 மேளகர்த்தா திட்டத்தில் முதல் மேளம்.
  • இது ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம்(நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் கனகாங்கி (01) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள் தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி கானாமுதம் கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி வாமதேவ பிரியசுதம் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலகம்&oldid=3830334" இலிருந்து மீள்விக்கப்பட்டது