சிங்கப்பூர் துறைமுகம்

துறைமுகம்

வார்ப்புரு:Intermodal freight transport

சிங்கப்பூர் துறைமுகம்

சிங்கப்பூர் துறைமுகம் என்பது கடல்சார்  வர்த்தகங்களை கையாளுவதற்கான ஒருங்கிணைந்த கூட்டு வசதிகள் மற்றும் முனையங்களின் செயல்பாடுகளை குறிக்கிறது. இது கையாளும் எடையின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பரபரப்பான துறைமுகமாகவும், சரக்கு கப்பல் பெட்டகம் போக்குவரத்தில் உலகின் ஐந்தாவது இடத்திலும், உலகின் வருடாந்திர கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பாதியளவும் இந்த துறைமுகத்தின் வழியே நடைபெறுகிறது. உலகின் பரபரப்பான கப்பல் துறைமுகம். இது சரக்கு கப்பலின் கையாளப்படும் மொத்த எடை அளவில்  2005 வரை பரபரப்பான துறைமுகமாக இருந்துள்ளது, பின்னர் ஷாங்காய் துறைமுகம் இதனை முந்தியுள்ளது. துறைமுகத்தில் நங்கூரம் இட்டுள்ள ஆயிரக்கணக்கான கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்தினை ஆறு கண்டங்களில் பரவியுள்ள 123 நாடுகளிலுள்ள 600 பிற துறைமுகங்களுடன் இணைக்கிறது.

வரலாறு தொகு

13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிங்கபுரா என அழைக்கப்படும் ஒரு தேசம் சிங்கப்பூர் ஆற்றின் வட கரையோரத்தில் நிறுவப்பட்டது. மலாக்கா நீரிணைப்பில் தெற்குப் பகுதியில் கட்டப்பட்ட இந்த துறைமுகமானது இந்த பகுதியில் கப்பல்களுக்கும், வணிகர்களுக்கும் உதவியது.

 
Xabandaria (the Shahbandar's place) marked in this 1604 map of Singapore by Godinho de Erédia. The map is orientated with the South towards the top left.
 
துறைமுக சிங்கப்பூர் செந்தோசா தீவு பின்னணி.

இயக்குபவர்கள் தொகு

 
சிங்கப்பூரிலுள்ள கெப்பல் பெட்டக முனையம்

PSA சிங்கப்பூர் சரக்கு பெட்டக வசதிகள் பின்வருமாறு:

  • சரக்குபெட்டக கப்பல் நிறுத்துமிடம்: 52
  • கப்பல் துறை நீளம்: 15,500 மீ
  • பரப்பளவு: 600 ஹெக்டர்
  • அதிக ஆழம்: 16 மீ
  • கப்பல் துறை எடைதூக்கிகள்: 190
  • நிர்மாணிக்கப்பட்ட கொள்ளவு: 35,000 kTEU

ஜூரோங் துறைமுக வசதிகள் பின்வருமாறு:

  • கப்பல் நிறுத்துமிடம்: 32
  • துறைமுக மேடை நீளம்: 5.6 கி. மீ
  • அதிகபட்ச கப்பல் ஆழம்: 15.7 மீ
  • அதிகபட்ச கப்பல் அளவு: 1,50,000 tonnes deadweight (DWT)
  • பரப்பளவும்: 127 ஹெக்டேர் சுதந்திர வர்த்தக வலயம், 28 ஹெக்டேர்  சுதந்திர வர்த்தக அல்லாத வலயம்
  • கிடங்கு வசதிகள்: 178,000 மீ 2

முனையங்கள் தொகு

 
தஞ்சோங் பாகர் பெட்டக முனையம்  இரவில் எடுக்கப்பட்ட புகைப்படம் (2009)
துறைமுகம் இயக்குபவர்கள் வகை கப்பல் நிறுத்துமிடம் கப்பல் துறை நீளம் கப்பல் துறை எடைதூக்கிகள் பரப்பளவு (ஹெக்டர்) திறன் (kTEU)
Brani (பிடி) PSA[1] சரக்கு பெட்டகம் 8 2,400 29 84
Cosco-PSA (சிபிடி) Cosco/PSA சரக்கு பெட்டகம் 2 720 மீ 22.8 >1,000
ஜூரோங் JTC பல்நோக்கு 32 5,600 155
கெப்பல்(KT) PSA சரக்கு பெட்டகம் 14 3,200 36 105
பாசிர் பஞ்சாங் (PPT 1) PSA சரக்கு பெட்டகம் 7 2,500 28 88
பாசிர் பஞ்சாங் (PPT 2) PSA சரக்கு பெட்டகம்
7 2,300 28 120
பாசிர் பஞ்சாங் (PPT 3) PSA சரக்கு பெட்டகம் 9 3,000 34 113
பாசிர் பஞ்சாங் (PPT 5) PSA சரக்கு பெட்டகம் 5 1,850 22 111
பாசிர் பஞ்சாங் Wharves PSA பொது
Sembawang PSA பொது 4 660 28
தஞ்சோங் பாகர் (TPT) PSA சரக்கு பெட்டகம் 7 2,100 27 85

குறிப்புகள் தொகு

  1. "Factsheet Singapore Terminals" (PDF). PSA Corporation Limited. Archived from the original (PDF) on 27 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 5 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் படிக்க தொகு

  • Sinnappah Arasaratnam (1972). Pre-modern Commerce and Society in Southern Asia : An Inaugural Lecture Delivered at the University of Malaya on December 21, 1971. Kuala Lumpur: University of Malaya. 
  • Braddell, Roland (1980). A Study of Ancient Times in the Malay Peninsula and the Straits of Malacca and Notes on Ancient Times in Malaya / by Dato Sir Roland Braddell. Notes on the Historical Geography of Malaya / by Dato F.W. Douglas (MBRAS reprints; no. 7). Kuala Lumpur: Printed for the Malaysian Branch of the Royal Asiatic Society by Art Print. Works. 
  • Chiang, Hai Ding (1978). A History of Straits Settlements Foreign Trade, 1870–1915 (Memoirs of the National Museum; no. 6). Singapore: National Museum. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_துறைமுகம்&oldid=3929788" இலிருந்து மீள்விக்கப்பட்டது