சிங்பான் வனவிலங்கு சரணாலயம்

இந்திய யானைகள் காப்பகம்

சிங்பான் வனவிலங்கு சரணாலயம் (Singphan Wildlife Sanctuary) இந்தியாவின் நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் நாளன்று நாகாலாந்து அரசாங்கம் இச்சரணாலயத்தை யானைகள் காப்பகமாக அறிவித்தது. 'சிங்பன் யானைகள் காப்பகம்' என்றும் அழைக்கப்படும் இச்சரணாலயம் நாட்டின் 30 ஆவது யானைகள் காப்பகமாகும்.[2]

அமைவிடம் தொகு

சிங்பான் வனவிலங்கு சரணாலயம் 5825 ஏக்கர் அல்லது 23.57 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகாலாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சிங்பன் வனவிலங்கு சரணாலயம் அசாமில் அமைந்துள்ள அபய்பூர் காப்புக்காடுகளுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.[3][4][5]

தாவரங்களும் விலங்குகளும் தொகு

வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. மரங்களும் மருத்துவ குணமும் நிறைந்த மரங்கள் இங்கு வளர்கின்றன. காட்டு அல்லிகள், மேப்பிள் மரங்கள், வெள்ளை மந்தாரைகள், நீல வாண்டா போன்றவை இங்கு காணப்படும் சில வகையான மூலிகைகளும் , உண்ணக்கூடிய தாவரங்களும் ஆகும். யானைகள், புலிகள், கொம்புக் கோழிகள், மலை ஆடுகள், புள்ளி சிறுத்தைகள், இருவாய்ச்சிப் பறவைகள் போன்ற சில விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Shangphan Wildlife Sanctuary | MON | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  2. "Singphan wildlife sanctuary declared 30th elephant reserve of the country". Business Standard India. Press Trust of India. 2018-08-31 இம் மூலத்தில் இருந்து 2022-02-11 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220211/https://www.business-standard.com/article/pti-stories/singphan-wildlife-sanctuary-declared-30th-elephant-reserve-of-the-country-118083101296_1.html. 
  3. "National Parks and Wildlife Sanctuaries in Nagaland". Nagaland GK (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-05. Archived from the original on 2022-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  4. News, Ne Now (2018-08-31). "Nagaland govt declares Singphan Wildlife Sanctuary as Singphan Elephant Reserve". NORTHEAST NOW (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11. {{cite web}}: |last= has generic name (help)
  5. "Vajiram IAS App for UPSC Aspirants". vajiramias.com (in ஆங்கிலம்). Archived from the original on 2022-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  6. "Shangphan Wildlife Sanctuary | MON | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.