சிம்பா (2019 தமிழ்த் திரைப்படம்)

2019 தமிழ்த் திரைப்படம்

சிம்பா 2019ஆண்டு இந்திய தமிழ் மொழி திரைப்படமாகும் இத்திரைப்படம்'ஒரு சிறந்த நகைச்சுவை படமாகும்' அரவிந்த் ஸ்ரீதர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இப்படத்தில் பரத் , பிரேம்ஜி அமரன், சுவாதி தீட்சித் மற்றும் பானு ஸ்ரீ மெஹ்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், அதே நேரத்தில் ரமணா துணை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சிம்பா ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய ஒரு சோதனை திரைப்படம் ஆகும். விமர்சனங்கள். [1] இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்டது.

சிம்பா (2019 தமிழ்த் திரைப்படம்)
இசைவிஷால் சந்திரசேகர்
நடிப்புபரத்
பிரேம்ஜி அமரன்
பானு ஸ்ரீ மெஹ்ரா
சுவாதி தீட்சித்
ரமணா
ஒளிப்பதிவுசினு சித்தார்த்
படத்தொகுப்புஆச்சு விஜயன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைக்களம் தொகு

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பரத், பிரபல நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். போதைக்கு அடிமையான பரத்தின் தாத்தாவின் இறந்துவிடுகிறார் அவரின் இறப்புக்கு பிறகு, பரத்தும் போதைக்கு அடிமையாகிறார். தனிவீட்டில் வசித்து வரும் இவர் யாருடனும் பேசாமல் பழகாமல் தனிமையுடன், தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், பரத் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிறுக்கும் நாயகி பனுஸ்ரீ மேஹ்ரா, தனது நாயை பார்த்துக் கொள்ளும்படி பரத்திடம் விட்டுச் செல்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் பரத்துக்கு நாய், நாய் மாதிரி இல்லாமல் பிரேம்ஜியாக தெரிகிறது. இவர் பிரேம்ஜியுடன் பேசி நட்பாகிறார் பனுஸ்ரீ மேஹ்ராவும் அடிக்கடி பரத் வீட்டிற்கு வந்து செல்கிறார் இந்தப் பழக்கத்தால் பரத் பனுஸ்ரீ மீது காதல் வயப்படுகிறார். தனது காதலுக்கு உதவும்படி பரத், பிரேம்ஜியிடம் கேட்கிறார். இதுஒருபுறம் இருக்க பனுஸ்ரீயுடன் ஒன்றாக பணிபுரியும் ரமணாவும் பனுஸ்ரீயை தீவிரமாக காதலிக்கிறார். பரத்துக்கு பிரேம்ஜியாக தோன்றும் நாய் அவரது காதலுக்கு உதவி அதன்மூலம் அவர்களின் காதல் எப்படி வெற்றி பெற்றது என்பது தான் படத்தின் மீதிக்கதை ஆகும்.

நடிகர்கள் தொகு

  • மகேஷாக பரத்
  • சிம்பாவாக பிரேம்ஜி அமரன்
  • மதுவாக பானு ஸ்ரீ மெஹ்ரா
  • டயானாவாக சுவாதி தீட்சித்
  • தீபக்காக ரமணா
  • சுவாமிநாதன்
  • கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராக சீனிவாசன்
  • ஸ்வேதா அசோக்

தயாரிப்பு தொகு

அரவிந்த் ஸ்ரீதர் நகைச்சுவை திரைக்கதையை எழுதினார் அதில், பரத் முக்கிய வேடத்தில் தோன்றுவதற்கு ஒப்பந்தமானார். சில எதிர்மறை அனுபவங்களின் மூலம் கூடுதல் உணர்ச்சித் திறனைப் பெறும் இளைஞராக நடித்துள்ளார்.[2] நடிகை பானு ஸ்ரீ மேரா பத்திரிக்கையாளராக நடிக்க ஒப்பந்தமானார் [3] . போதைப்பொருள் உபயோகிப்பவராக இருந்த தனது நண்பன் இடம்பெற்ற ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார். அதில் தனது அனுபவங்களைக் கொண்டு ஒரு கற்பனைக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர் . பரத் ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் திரைக்கதையின் பொருட்செலவு சாத்தியம் குறித்து தயங்கினார். ஆனால் பின்னர் படத்தைத் செய்யத் தேர்வு செய்தார். மேஜிக் சேர் கே.சிவனேஸ்வரன் ஜூன் 2015 இல் சதீஷால் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் இத்திரைப்படத்தை எடுக்கத் துவங்கினார்.

இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2016ஆம் ஆண்டு முடிவடைந்தது, இப்படத்தின் முதல் முன்னோட்டம் அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, இப்படத்தின் இரண்டாவது முன்னோட்டம் அக்டோபர் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது,[4][5] நீண்ட தாமதத்திற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இப்படம் வெளியிடப்பட்டது [6].

ஒலிப்பதிவு தொகு

நடிகர் சிலம்பரசன் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த ஒரு பாடல் மட்டும் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி படத்தின் மொத்த பாடல்கள் வெளியிடுவதற்கு முன்னரே வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-28. பார்க்கப்பட்ட நாள் 2019-12-28.
  2. Nikhil Raghavan. "Etcetera: Laughing to the bank". The Hindu.
  3. Nikhil Raghavan. "Etcetera: Tones and textures". The Hindu.
  4. https://www.indiaglitz.com/simba-teaser-promises-a-technically-slick-stoner-movie--tamil-news-198786
  5. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/simba-second-teaser-dhanush-releases-the-quirky-dope-anthem/articleshow/66121127.cms
  6. "SIMBA MOVIE REVIEW".