சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது

நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்திய நாடாளுமன்றக் குழுவினால் வழங்கப்படும் விருது

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது (Outstanding Parliamentarian Award) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக இந்திய நாடாளுமன்றத்தின் பதவியிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்திய நாடாளுமன்றக் குழுவினால் வழங்கப்படும் விருது ஆகும். இதனை 1991 முதல் 1996 வரை மக்களவையின் பேரவைத் தலைவராக இருந்த சிவராஜ் பாட்டீல் 1995-ல் நிறுவினார்.[1]

விருது பெற்றவர்கள் தொகு

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதுகள் வென்றவர்களின் பட்டியல்
ஆண்டு பரிசு பெற்றவர்கள்
1995   சந்திர சேகர்[1]
1996   சோம்நாத் சாட்டர்ஜி[1]
1997   பிரணாப் முகர்ஜி[1]
1998   எஸ். ஜெய்பால் ரெட்டி [1]
1999   லால் கிருஷ்ண அத்வானி[1]
2000   அர்ஜுன் சிங்[1]
2001   ஜஸ்வந்த் சிங் [1]
2002   மன்மோகன் சிங் [1]
2003   சரத் பவார்
2004   சுஷ்மா சுவராஜ்
2005   ப.சிதம்பரம்
2006   மணி சங்கர் ஐயர்
2007   பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி [2]
2008 மோகன் சிங் [2]
2009   முரளி மனோகர் ஜோஷி [2]
2010   அருண் ஜெட்லி
2011   கரண் சிங்
2012   சரத் யாதவ்
2013   நஜ்மா எப்துல்லா
2014 உக்கும்தேவ் நாராயண் யாதவ்
2015   குலாம் நபி ஆசாத்
2016   தினேஷ் திரிவேதி
2017   பருத்ருகரி மகதப்[3]

விமர்சனம் தொகு

பிரதான அரசியல் கட்சிகளின் குறிப்பிட்ட மூத்த தலைவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது' வழங்குவதற்கான சேவையின் அவசியம், தீவிரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Indian Parliamentary Group". பார்க்கப்பட்ட நாள் 7 November 2012.
  2. 2.0 2.1 2.2 "Dasmunsi, M M Joshi to get Outstanding Parliamentarian award". http://timesofindia.indiatimes.com/india/Dasmunsi-M-M-Joshi-to-get-Outstanding-Parliamentarian-award/articleshow/6266603.cms. 
  3. "Rajya Sabha Congratulates Best Parliamentarian Awardees". https://www.ndtv.com/india-news/rajya-sabha-congratulates-best-parliamentarian-awardees-1894066. 
  4. "Need for 'please-all' Parliamentarian Award questioned". The Hindu. 27 March 2013. http://www.thehindu.com/news/national/need-for-pleaseall-parliamentarian-award-questioned/article4551806.ece. 

வெளி இணைப்புகள் தொகு