சில்ரன் ஆப் ஹெவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3736996 by Almighty34 (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo
வரிசை 14:
music = |
}}
'''சொர்க்கத்தின் குழந்தைகள்'''<ref>{{Cite web|url=https://www.miramax.com/movie/children-of-heaven/|title=Children of Heaven}}</ref> ({{lang-fa|بچه‌های آسمان}}, பாச்சிகா-யெ அசெமான்) என்பது 1997 ஆம் ஆண்டு [[இரான்]] நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த ஒரு [[குடும்பத் திரைப்படம்]] ஆகும். இதனை [[மசித் மசிதி]] எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் '''சில்ரன் ஆப் ஹெவன்''' (''Children of heaven'') என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
 
இப்படம் ஒரு சகோதரன் சகோதரி இடையே நிலவும் அன்பு, சகோதரியின் காலணிகள் தொலைந்து விடுவதால் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், அதை சமாளிக்க அவர்கள் கையாளும் ருசிகர உத்திகள், இரானில் நிலவும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை குழந்தைகளின் பார்வையிலிருந்தும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிற மொழித் திரைப்படத்துக்கான [[அகாதமி விருது]] கிடைத்தது.
 
== கதை ==
ஒன்பது வயது அலி தனது சகோதரி சாராவின் காலணியை செருப்பு தைப்பவரிடம் கொடுத்து சரிசெய்துவிட்டு உருளைக்கிழங்கு வாங்க செல்கிறான். கடைக்கு வெளியே காலணியை வைத்துவிட்டு உள்ளே உருளைக்கிழங்கு வாங்கிக்கொண்டிருக்கும் போது பழைய பொருட்களை எடுத்துச்செல்பவன் பழைய குப்பைகளுடன் காலணியையும் குப்பையாக எடுத்துச்செல்கிறான். தொலைந்து போனதை அறிந்து கொண்ட அலி சோதிக்கும் பொருட்டு பழங்களை கீழ விழச்செல்கிறான். கோபமடையும் கடைக்காரர் அவனை துரத்திவிடுகிறார்.
 
அலி தனது குடும்பத்துடன் தெற்கு [[தெகுரான்|தெஹ்ரானில்]] வசிக்கிறான். ஏற்கனவே அலியின் தாய் ஐந்து மாதமாக வாடகை செலுத்தாததும், மளிகைக்கடையில் பாக்கி இருப்பதுமாக தனது குடும்பம் நிதிசிக்கலில் தவிப்பதால் காலணி தொலைந்ததை பெற்றோரிடம் சொல்ல பயப்படுகிறான். சாராவிடம் காலணி தொலைந்ததை சொல்லும் அலி பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான். மேலும் எப்படி சமாளிப்பது என்று கேட்கிறான். இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதாவது, காலையில் பள்ளிக்கு செல்லும் சாரா மதியத்தில் தனது காலணியை அலிக்கு கொடுத்துவிட வேண்டும். இப்படியாக நாட்கள் செல்கிறது. தினமும் பள்ளிக்கு தாமதமாக செல்கிறார். இதனால் அலிக்கும் சாராவுக்கும் சண்டை உருவாகிறது. இதற்கிடையில் அதிக மதிப்பெண் பெற்றதால் ஆசிரியரிடம் தங்க நிற பேனாவை பரிசாக பெறுகிறார். பேனாவை சாராவிடம் அன்பளிப்பாக கொடுக்கிறான்.
 
என்னதான் சாராவிடம் காலணியை வாங்கிக்கொண்டு வேகமாக பள்ளிக்கு ஓடினாலும் கால தாமதமாக வருவதால் பள்ளியில் தொடர்ந்து தண்டிக்கப்படுகிறார். முதல்முறை பள்ளியின் முதல்வர் அவனை விட்டுவிடுகிறார். இரண்டாவது முறை எச்சரிக்கிரார். மூன்றாவது முறையும் தாமதமாக வந்ததால் பள்ளியை விட்டு வெளியே கிளம்ப சொல்கிறார். அவரது தந்தையுடன் வந்து பார்க்கச்சொல்கிறார். இதைக்கேட்டு அழுகின்ற அலியைப்பார்க்கும் அவனது ஆசிரியர் இவன் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் என்றும் அவனுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கும்படியும் முதல்வரிடம் அனுமதி வாங்குகிறார்.
 
ஒரு நாள் ரொயா எனும் மாணவி தனது காலணியை அணிந்திருப்பதை சாரா கண்டுபிடிக்கிறாள். பள்ளி முடிந்ததும் ரோயாவை பின் தொடரும் சாரா பிறகு அலியையும் உடன் அழைத்து வருகிறாள். அப்போது தான் அவர்களுக்கு ரோயாவின் தந்தை கண் பார்வையற்றவர் என்று தெரியவருகிறது. உடனே அங்கிருந்து கிளம்புகிறார்கள். ரோயா நன்றாக படிப்பதால் அவன் தந்தை அவளுக்கு புதிய ஊதா நிற காலணிகளை வாங்கித்தருகிறார். அதனால் சாராவின் பழைய காலணிகளை வீசிவிடுகிறாள் ரோயா. தனது புதிய நண்பரிடமிருந்து இதை தெரிந்துகொள்ளும் சாரா திகைத்துப்போகிறாள்.
 
அலியின் தந்தை மேலும் பணம் சம்பாதிக்க தோட்ட வேலை செய்வதற்கான உபகரணங்களை இரவலாக பெற்றுக்கொண்டு அலியுடன் வடக்கு [[தெகுரான்|தெஹ்ரானில்]] பணக்காரகள் வாழும் பகுதியில் முயற்சிக்கிறார். பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்காத சமயம், அங்கு ஆறு வயது சிறுவன் அலிரேசா தன் தாத்தாவுடன் இருக்கும் வீட்டில் வேலை கிடைக்கிறது. அலியும் அலிரேசாவும் விளையாடிக்கொண்டிருக்க அலியின் தந்தை வேலையை முடிக்கிறார். அலிரேசாவின் தாத்தா தன்னை அணுகிய விதத்தைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார் அலியின் தந்தை. அங்கிருந்து கிளம்பும் வழியில் சாராவுக்கு புது காலணிகளை வாங்கலாம் என நினைக்கிறார். ஆனால் அவர்களின் இரு சக்கர மிதிவண்டியின் (சைக்கிள்) பிரேக் பழுதடைந்ததால் அவரது தந்தை விபத்துக்குள்ளாகிறார். இதனால் அவர் வண்டி உடைந்து போகிறது. அவர் அப்பாவும் தீவிரமாக காயமடைகிறார்.
 
இறுதியாக, உயர்தர குழந்தைகள் படிக்கும் பல பள்ளிகளுக்கான நான்கு கிலோமிட்டர் கால் பந்தய போட்டி இந்த மாகாணத்தில் நிகழ்வதை தெரிந்துகொள்கிறான். அந்தப்போட்டியில் மூன்றாவது பரிசாக ஒரு வாரம் விடுமுறை முகாம் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் பரிசு என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சாராவுக்கு புது செருப்பு வாங்கித்தரலாம் என நினைக்கிறான். ஆனால் தற்செயலாக போட்டியில் முதல் இடத்தை பிடித்துவிடுகிறான். முதல் இடம் பிடித்துவிட்டதால் காலணி கிடைக்காமல் போனதற்கு மிகவும் ஏமாற்றமடைகிறான். சாரா அவனுக்காக காத்துக்கொண்டிருக்க அலி வீட்டுக்குத்திரும்புகிறான். இன்னொரு பக்கம், அலியின் தந்தை தனது மிதிவண்டியில் தான் வாங்கிய பொருட்களுடன் புதிதாக வாங்கிய ஒரு வெள்ளை நிற காலணியும், இளஞ்சிவப்பு நிற காலணியையும் வைக்கிறார். படத்தின் கடைசி காட்சியாக, காலணிகள் கிழிந்துபோனதால் சோர்ந்து போன அலி, கொப்பளங்கள் விழுந்த தனது கால்களை குளத்தில் நனைப்பதுடன் படம் நிறைவடைகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சில்ரன்_ஆப்_ஹெவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது