சிறீசந்த் கோயல்

இந்திய அரசியல்வாதி

சிறீசந்த் கோயல் (Srichand Goyal) (சந்த் கோயல் என்றும் அழைக்கப்படுகிறார்) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1967 இல் சண்டிகர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] பாரதிய ஜன சங்கத்தின் (பிஜேஎஸ்) உறுப்பினரான இவர் மார்ச் 1967 முதல் 1970 திசம்பர் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

சிறீசந்த் கோயல்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
மார்ச் 1967 – திசம்பர் 1970
Opponentஅமர்நாத் வித்யாலங்கார்
பின்னவர்அமர்நாத் வித்யாலங்கார்
தொகுதிசண்டிகர், இந்தியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1915
கைம்ப்லா கிராமம், கர்னால், பிரிக்கப்படாத பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனசங்கம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

1915 ஆகத்து 15, 1915 இல் பஞ்சாப் மாகாணத்தில் (பிரித்தானிய இந்தியா) கர்னாலில் உள்ள கைம்ப்லா என்ற கிராமத்தில் பிறந்தார்,[2] தில்லியின் ராம்ஜாஸ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, தில்லி; மற்றும் சட்ட கல்லூரி, தில்லி ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றார். இவர் மார்ச் 14, 1956 அன்று புஷ்பலதா கோயல் என்பவரை மணந்தார்.

அரசியல் வாழ்க்கை தொகு

அகில இந்திய ஜனசங்கத்தின் நிறுவன உறுப்பினரான இவர் பஞ்சாப் ஜனசங்கத்தின் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இவர் இரண்டு முறை பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் (பிப்ரவரி 1958 - ஏப்ரல் 1960, மற்றும் ஏப்ரல் 1964 - அக்டோபர் 1966). இவர் குறைதீர்மனுக்கள் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்; அரசாங்க ஈட்டுறுதிக் குழு; மற்றும் பொது கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டு குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். மார்ச் 1967 இல் நடைபெற்ற சண்டிகர் (மக்களவைத் தொகுதி) தேர்தலில், கோயல் 23,393 வாக்குகளைப் பெற்று 11,323 வாக்குகளைப் பெற்ற காங்கிரஸின் அமர் நாத் வித்யாலங்கரை தோற்கடித்தார்.[3] ஸ்வதந்திர கட்சியைச் சேர்ந்த ஹர்பன்ஸ் சிங் குஜ்ரால் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இருப்பினும், 1971 இல், கோயலின் வாக்குகள் 16,854 வாக்குகளாக சரிந்தன, மேலும் அவர் 48,335 வாக்குகளைப் பெற்ற அமர் நாத் வித்யாலங்கரிடம் தோற்றார்.

ஒரு வழக்கறிஞராக, இவர் அவசரகாலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

குடும்பம் தொகு

இவருக்கு புஷ்பா லதா கோயல் என்ற மனைவியும் பர்வீன் கோயல் மற்றும் சஞ்சய் கோயல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுகின்றனர். முன்னாள் பாரதிய ஜனதா (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் சத்ய பால் ஜெயின் ஸ்ரீசந்த் கோயலின் கீழ் ஒரு பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[4] கோயல் சங்ரூர் மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

நினைவகம் தொகு

சண்டிகர் பிரிவு 33 இல் உள்ள பாஜக தலைமையகத்தின் கலையரங்கத்திற்கு சந்த் கோயல் பெயரிடப்பட்டது.[5]

குறிப்புகள் தொகு

  1. "Members : Lok Sabha". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  2. "Members Bioprofile". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  3. "Previous Winners in Chandigarh Parliament". Lokmat. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
  4. "Chandigarh – The City Beautiful". Satya Pal Jain. 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  5. "BJP Auditorium will be dedicated to Chand Goyal". United News of India. 19 June 2016. http://www.uniindia.com/chandigarh-bjp-auditorium-will-be-dedicated-to-babu-shrichand-goyal-tandon/states/news/524953.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீசந்த்_கோயல்&oldid=3481221" இலிருந்து மீள்விக்கப்பட்டது