சிறைக்கூடு: இலங்கைக்கான போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் (நூல்)

சிறைக்கூடு: இலங்கைக்கான போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் என்பது இறுதி ஈழப் போரின் கொடூரங்களையும், அதன் வரலாற்றுப் பின்னணியையும் ஆயும் நூல் ஆகும். இந்த நூலை இறுதிப் போரின் போது, 2009 தொடக்க காலம் வரை ஐ.நா பேச்சாளாராக இலங்கையில் பணியாற்றிய Gordon Weiss எழுதியுள்ளார்.

உள்ளடக்கம் தொகு

இந்த நூல் இலங்கையின் மக்களாட்சி மக்களாட்சி பெளத்த அடிப்படைவாதிகளாலும், சிறுகுழு (oligarchy) சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் பிக்குமார்களால் கடத்தப்பட்டது என்றும், அதன் விளைவால் விடுதலைப் புலிகள் தோற்றுவிக்கப்பட்டது என்றும் வாதிடுகிறது. இலங்கையில் அரசு, பொருளாதாரம், நீதி, ஊடகங்கள் என அனைத்தும் ராசபக்ச சகோதரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்த நூல் கூறுகிறது. இலங்கை சீனா, ஈரான், பார்மா, லிபியா போன்ற நாடுகளின் நட்புடன் இதைச் சாதிக்க முடிகிறது என்றும் வாதிடுகிறது.