சிலாங்கூர் மந்திரி பெசார்

சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசார்கள்

சிலாங்கூர் மந்திரி பெசார் அல்லது சிலாங்கூர் முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Selangor அல்லது First Minister of Selangor; மலாய்: Menteri Besar Selangor; சீனம்: 雪兰莪州务大臣) என்பவர் மலேசிய மாநிலமான சிலாங்கூர் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் என்று அழைப்பது வழக்கம். இவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் (Selangor State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.[1][2]

சிலாங்கூர் மந்திரி பெசார்
Menteri Besar of Selangor
Menteri Besar Selangor
தற்போது
அமிருதீன் சாரி
(Amirudin Shari)

19 சூன் 2018 முதல்
சிலாங்கூர் மாநில அரசு
உறுப்பினர்சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு
அறிக்கைகள்சிலாங்கூர் மாநில சட்டமன்றம்
வாழுமிடம்Jalan Permata 7/1, Seksyen 7, 40000 சா ஆலாம், சிலாங்கூர்
அலுவலகம்Tingkat 21, Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah, 40503 சா ஆலாம், சிலாங்கூர்
நியமிப்பவர்சுல்தான் சராபுதீன்
சிலாங்கூர் சுல்தான்
பதவிக் காலம்5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது
அரசமைப்புக் கருவிசிலாங்கூர் அரசியலமைப்பின் சட்டங்கள் 1959
முதலாவதாக பதவியேற்றவர்அம்சா அப்துல்லா
(Hamzah Abdullah)
உருவாக்கம்சூன் 1947; 76 ஆண்டுகளுக்கு முன்னர் (1947-06)
இணையதளம்www.selangor.gov.my/index.php/pages/view/82

தற்போது சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் அமிருதீன் சாரி (Amirudin Shari). இவர் 19 சூன் 2018 முதல் மாநில முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.[3]

நியமனம் தொகு

சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, சிலாங்கூர் சுல்தான் முதலில் மந்திரி பெசாரை நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும்.

சிலாங்கூர் மந்திரி பெசார் இசுலாம் மதத்தைச் சார்ந்தவராகவும்; மலாய் இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் சிலாங்கூர் சுல்தான் நியமிப்பார்.

ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தொகு

மாநில அரசாங்கம் தனது சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது சுல்தானின் பொறுப்பு ஆகும். சுல்தான் அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் பதவியில் இருப்பார்.

ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியைத் துறப்பு செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராகச் சுல்தான் நியமிப்பார்.

அதிகாரங்கள் தொகு

ஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்று அரசாங்கத்தில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.

தற்காலிக மாநில அரசின் மந்திரி பெசார் தொகு

மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்க பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.

சிலாங்கூர் மந்திரி பெசார் பட்டியல் தொகு

1947-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையிலான சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசார்களின் பட்டியல் பின்வருமாறு:

அரசியல் கட்சிகள்:
      சுயேச்சை /       கூட்டணி /       தேசிய முன்னணி       பாக்காத்தான் ராக்யாட்       பாக்காத்தான் அரப்பான்

# தோற்றம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
தொகுதி
பதவியில் கட்சி[a] தேர்தல் கூட்டத் தொடர்
பதவியேற்பு பதவி விலகல் பதவி காலம்
1   அம்சா அப்துல்லா
(Hamzah Abdullah)
(1890–1971)
சூன்
1949
1 சூலை
1949
சுயேச்சை
2   ராஜா ஊடா
(Raja Uda)
(1894–1976)
1 சூலை
1949
மார்ச்
1953
சுயேச்சை
3   ஒசுமான் முகமட்
(Othman Mohamad)
(பிறப்பு 1905)
மார்ச்
1953
செப்டம்பர்
1954
கூட்டணி
(அம்னோ)
4   ராஜா ஊடா
(Raja Uda)
(1894–1976)
செப்டம்பர்
1954
ஆகஸ்டு
1955
சுயேச்சை
5   அப்துல் அசீசு அப்துல் மஜீட்
(Abdul Aziz Abdul Majid)
(1908–1975)
ஆகஸ்டு
1955
1956 கூட்டணி
(அம்னோ)
6   முகமட் இசுமாயில் அப்துல் லத்தீப்
(Muhammad Ismail Abdul Latiff)
(1894–1976)
1956 1958 2 ஆண்டுகள் கூட்டணி
(அம்னோ)
7   அப்துல் சமீல் அப்துல் ராயிஸ்
(Abdul Jamil Abdul Rais)
(1912–1994)
1958 மே
1959
கூட்டணி
(அம்னோ)
8   அபு பக்கர் பகின்டா
(Abu Bakar Baginda)
(1899–1972)
டெங்கில் சட்டமன்ற உறுப்பினர்
30 மே
1959
19 மார்ச்
1964
4 ஆண்டுகள், 294 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1959 1-ஆவது சட்டமன்றத் தொடர்
9   டத்தோ செரி
அருண் இட்ரிஸ்
(Harun Idris)
(1925–2003)
மோரிப் சட்டமன்ற உறுப்பினர்
19 மார்ச்
1964
24 மார்ச்
1976
12 ஆண்டுகள், 5 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1964 2-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
1969 3-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
கூட்டணி
(அம்னோ)
1974 4-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
10   ஒர்மாட் ரபி
(Hormat Rafei)
(1923–2001)
பந்திங் சட்டமன்ற உறுப்பினர்
15 ஏப்ரல்
1976
3 மே
1982
6 ஆண்டுகள், 18 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1978 5-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
11   டத்தோ செரி
அகமட் ரசாலி மொகமட் அலி
(Ahmad Razali Mohamad Ali)
(1928–2001)
அம்பாங் சட்டமன்ற உறுப்பினர்
4 மே
1982
13 ஆகஸ்டு
1986
4 ஆண்டுகள், 101 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1982 6-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
12   டான் செரி; டத்தோ செரி
முகமட் தாயிப்
(Muhammad Muhammad Taib)
(பிறப்பு 1945)
பத்தாங் காலி சட்டமன்ற உறுப்பினர்
14 ஆகஸ்டு
1986
14 ஏப்ரல்
1997
10 ஆண்டுகள், 243 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1986 7-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
1990 8-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
1995 9-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
13   டத்தோ செரி
அபு அசான் ஒமார்
(Abu Hassan Omar)
(1940–2018)
பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர்
6 சூன்
1997
9 ஆகஸ்டு
2000
3 ஆண்டுகள், 64 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1999 10-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
14   டத்தோ செரி; டாக்டர்
கிர் தோயோ
(Mohamad Khir Toyo)
(பிறப்பு 1965)
சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர்
18 August
2000
13 March
2008
7 ஆண்டுகள், 208 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
2004 11-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
15   டான் செரி; டத்தோ செரி
காலிட் இப்ராகிம்
(Abdul Khalid Ibrahim)
(1946–2022)
ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் (2008–2013)
கிள்ளான் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் (2013–2018)
13 மார்ச்
2008
23 செப்டம்பர்
2014
6 ஆண்டுகள், 194 நாட்கள் பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
2008 12-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
2013 13-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
16   டத்தோ செரி
அசுமின் அலி
(Azmin Ali)
(பிறப்பு 1964)
புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்ற உறுப்பினர்
23 செப்டம்பர்
2014
18 சூன்
2018
3 ஆண்டுகள், 268 நாட்கள் பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
2018 14-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
17   டத்தோ செரி
அமிருதீன் சாரி
(Amirudin Shari)
(பிறப்பு 1980)
சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர்
19 சூன்
2018
பதவியில் உள்ளார் 5 ஆண்டுகள், 335 நாட்கள் பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
சிலாங்கூர் மாநிலத் தேர்தல், 2023 15-ஆவது சட்டமன்ற உறுப்பினர்கள்
  1. இந்த நெடுவரிசையில் மந்திரி பெசார் சார்ந்த கட்சியின் பெயர் மட்டுமே உள்ளது. அவர் தலைமையிலான மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; அவை இங்கே பட்டியலிடப்படவில்லை.

வாழும் முன்னாள் மந்திரி பெசார்கள் தொகு

பெயர் பதவியின் காலம் பிறந்த தேதி
முகமட் தாயிப் 1986–1997 29 சூலை 1945 (வயது 78)
கிர் தோயோ 2000–2008 6 ஆகஸ்டு 1965 (வயது 58)
அசுமின் அலி 2014–2018 25 ஆகஸ்டு1964 (வயது 59)

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு