சில்லே ஊமா உசுமான்

சில்-இ-ஊமா உசுமான் (செப்டம்பர் 16, 1971 – பிப்ரவரி 20, 2007) (Zill-e-Huma Usman) பாக்கித்தான் அரசியல்வாதி மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான ஆர்வலர் ஆவார். 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பர்வேசு முசாரப்பின் இராணுவ சர்வாதிகாரத்தில் அமைச்சராக இவர் பணியாற்றினார்.

சில்-இ-ஊமா உசுமான்
Zill-e-Huma Usman
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 16, 1971
இறப்புபிப்ரவரி 20, 2007
தேசியம்பாக்கித்தானியர்
வேலைஅரசியல்வாதி மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
அறியப்படுவதுபடுகொலை செய்யப்பட்ட பஞ்சாப், சமூக நலத் துறை அமைச்சர்

சில்-இ-ஊமா உசுமான் ஒரு குறிப்பிடத்தக்க பாக்கித்தான் அரசியல்வாதி ஆவார். இவர் பெண்களின் உரிமைகளுக்கான ஆர்வலராக பணியாற்றினார். நன்கு படித்த அரசியல்வாதிகளில் ஒருவரான இவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்காக நன்கு அறியப்படுகிறார்.

கல்வி தொகு

உசுமான் 1997 ஆம் ஆண்டு சட்டத்தில் (எல்எல்பி) இளநிலை பட்டம் பெற்றார், பின்னர் லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]

தொழில் தொகு

சில்-இ- ஊமா உசுமான் முகம்மது உசுமான் ஐதரை மணந்து கொண்டார்.[2] இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இவர்களது குடும்பத்தில் அரசியல் பங்கேற்புக்கான ஒரே குடும்ப உறுப்பினராக சில்-இ- ஊமா உசுமான் இருந்தார்.[1] இவர் பாக்கித்தான் முசுலிம் லீக் (கியூ) என்ற அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.

2002 பாக்கித்தான் பொதுத் தேர்தல்

2002 ஆம் ஆண்டில் உசுமான் பஞ்சாப் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். 2003 ஆம் ஆண்டு முதல் 2006 ஆஅம் ஆண்டு வரை இவர் வளர்ச்சி மற்றும் திட்டமிடல் துறையில் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த இவர் அதே 2006 ஆம் ஆண்டில், பெண்களுக்கான சமூக நல அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]

இறப்பு தொகு

பஞ்சாபில் சமூக நலத்துக்கான மாகாண அமைச்சராக பணியாற்றியபோது, 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியன்று [3] குச்ரான்வாலாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். லாகூருக்கு வடக்கே 70 கி.மீ. தொலைவில் கட்சி உறுப்பினர்களை சந்தித்தபோது, கூட்டத்திற்கு வந்தவர்களில் ஒருவன் இவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். உசுமான் குச்ரான்வாலாவில் உள்ள ஓர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பின்னர் லாகூருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அறுவை சிகிச்சையின் போது சிகிச்சை பலனின்றி உசுமான் இறந்தார்.[4][5]

கொலையாளியான முகமது சர்வார், இசுலாமிய ஆடைக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்க மறுத்ததாலும், அரசியல் விவகாரங்களில் பெண்கள் ஈடுபடுவதை விரும்பாததாலும் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலையாளி முன்னதாக் நான்கு விபச்சாரிகளை கொன்று சிதைத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர். ஒரு தொலைக்காட்சியில் "நான் மீண்டும் விடுவிக்கப்பட்டால், சரியான பாதையில் செல்லாத அனைத்து பெண்களையும் கொன்றுவிடுவேன்" என்று கூறியதாக அறியப்படுகிறது.[6] மார்ச் 20, 2007 அன்று, சர்வாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.[7] இவர் சனவரி 27, 2012 அன்று லாகூரில் உள்ள மத்திய சிறையில் [8] இறந்தார்.

ஒரு வேட்பாளர் மற்றும் வாக்காளராகப் அரசியல் நடவடிக்கைகள் பெண்களின் பங்கேற்பு எப்போதும் பாக்கித்தான் நாட்டில் சவாலாக எதிர்கொள்ள நேரிடுகிறது.[9][10] பாத்திமா சின்னா, பெனாசீர் பூட்டோ, மலாலா யூசுப்சாய், வரங்க லோனி அல்லது சில்-இ-ஊமா உசுமான் .[11][12][13] போன்றவர்கள் இந்த காரணத்திற்காகவே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உசுமானின் மரணம் பாக்கித்தானில் நிலவிய இசுலாமிய தீவிரவாதத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்படுகொலைச் சம்பவத்தால் மிதவாதிகளுக்கும் இசுலாமிய தீவிரவாதிகளுக்கும் இடையிலான போர்க்களப் பிரச்சினையாக மாறியது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Zil-e-Huma Usman". Pakpedia | Pakistan's Biggest Online Encyclopedia. 20 February 2018."Zil-e-Huma Usman". Pakpedia | Pakistan's Biggest Online Encyclopedia. 20 February 2018.
  2. "Violent debate on women's rights in Pakistan". Christian Science Monitor. 6 March 2007.
  3. "Provincial minister’s murder condemned" (in en). DAWN.COM. 21 February 2007. https://www.dawn.com/news/233879. 
  4. "Woman minister killed by fanatic" (in en). DAWN.COM. 21 February 2007. https://www.dawn.com/news/233951/woman-minister-killed-by-fanatic. 
  5. "Gunman kills Pakistani minister". 20 February 2007. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6379169.stm. "Gunman kills Pakistani minister". 20 February 2007.
  6. Devika Bhat and Zahid Hussain: Female Pakistani minister shot dead for 'breaking Islamic dress code', தி டைம்ஸ், February 20, 2007
  7. "Pakistani Judge Sentences Man to Death for Murdering Female Minister". Foxnews.com. 2007-03-20. பார்க்கப்பட்ட நாள் 2013-09-23.
  8. "Prison death: Minister’s killer dies of tuberculosis". 27 January 2012. https://tribune.com.pk/story/327961/punjab-mpas-murderer-dead-under-suspicious-circumstances. 
  9. Says, Krepon (28 August 2018). "An Uphill Battle: Women's Participation in the 2018 Pakistan Elections". South Asian Voices.
  10. "Women in Pakistan Politics- Botox or Fillers?". ViewPoint. 14 June 2018. Archived from the original on 28 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  11. Politics, iKNOW (20 October 2014). "Women's political participation in Pakistan". International Knowledge Network of Women in Politics (in ஆங்கிலம்).
  12. "PTM Leaders Arrested In Loralai, Balochistan Ahead Of Public Meeting". Naya Daur. 9 February 2020. https://nayadaur.tv/amp/2020/02/ptm-leaders-arrested-in-loralai-balochistan-ahead-of-public-meeting/. 
  13. Sattar, Sidra (14 June 2018). "Participation Of Women In Pakistan's Politics". Jahangir's World Times. Archived from the original on 14 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லே_ஊமா_உசுமான்&oldid=3744942" இலிருந்து மீள்விக்கப்பட்டது