சிவா விஷ்ணு கோயில்

சிவா விஷ்ணு கோயில் என்பது இந்துக் கோயிலின் கருவறைகளில் வீற்றிருக்கும் மூலவர் தெய்வங்கள் தனித்தனியாக சிவன் (லிங்கத் திருமேனி) மற்றும் பெருமாள் அம்சங்களாக இருக்கும் பட்சத்தில், அக்கோயில் சிவா விஷ்ணு கோயில் என்றழைக்கப்படுகிறது. அந்த அம்சங்களானது வெவ்வேறு திருநாமங்கள் கொண்டு காணப்படுகின்றன. சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கும் சிவா விஷ்ணு கோயில்கள் பரவலாக, ஆனால் எண்ணிக்கையில் குறைவாக தமிழ்நாட்டில் காணப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற சென்னையிலுள்ள தியாகராய நகர் சிவா விஷ்ணு கோயில்,[1] சென்னையிலுள்ள அண்ணா நகர் மேற்கு விரிவு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சென்னை சிவாவிஷ்ணு கோயில்[2] மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் பகுதியில் அமைந்துள்ள ஜல நாராயணப் பெருமாள் குடிகொண்டுள்ள காக்களூர் சிவா விஷ்ணு கோயில்[3][4] ஆகியவை சில முக்கியமான சிவா விஷ்ணு கோயில்களாகும்.

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ண் சிவா விஷ்ணு கோயில், சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சிவா விஷ்ணு கோயிலாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Arulmigu Sivavishnu Temple, T.Nagar, Chennai - 600017, Chennai District [TM000372].,Sivavishnu,SRI SIVA VISHNU,VALLI THEIVANAI". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
  2. "Arulmigu Siva Vishnu Temple, Anna Nagar West Extension, Chennai - 600101, Chennai District [TM000299].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
  3. "சிவா விஷ்ணு ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா". m.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
  4. "சிவா - விஷ்ணு கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா - Dinamalar Tamil News". Dinamalar. 2013-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.

வெளி இணைப்புகள் தொகு

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவா_விஷ்ணு_கோயில்&oldid=3800162" இலிருந்து மீள்விக்கப்பட்டது