சி. மு. ராஜேஷ் கௌடா

இந்திய அரசியல்வாதி

சி. மு. ராஜேஷ் கௌடா (C. M. Rajesh Gowda) ஓர் இந்திய கதிரியக்க நிபுணரும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் சிராவிலிருந்து கர்நாடக சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[2] மேலும் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி கர்நாடகாவின் இளைய சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

மருத்துவர் சி. மு. ராஜேஷ் கௌடா
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 நவம்பர்r 2020
முன்னையவர்பி. சத்யநாராயணா
தொகுதிசிரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சி. மு. ராஜேஷ் கௌடா

1973 (அகவை 50–51)
தும்கூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மருத்துவர் தேஜஸ்வினி. எம். யு
பெற்றோர்சி. ப. முதலகிரியப்பா
வாழிடம்பெங்களூர்
கல்விஇளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல், [DMRD (Radio Diagnosis) 2005 from A.I.M.S.B.G. Nagar (R.G.U.H.S.)]
தொழில்ஊடுகதிரியல்

இவரது தந்தை சிபி முதலகிரியப்பா மூன்று முறை காங்கிரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு மருத்துவ நிபுணராக, டாக்டர் ராஜேஷ் கௌடா தனது மருத்துவ நடைமுறையில் கவனம் செலுத்தினார். நோயாளிகளுக்கான இவரது சேவையை பொது மக்கள் நேசித்ததில் இவர் பொது வாழ்க்கையில் நுழைய ஊக்கம் பெற்றார்.[3] 2020 இடைத்தேர்தலில் சிரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

டாக்டர் ராஜேஷ் கௌடா, காங்கிரசு தலைவர் யதீந்திர சித்தராமையாவுடன் இணைந்து மேட்ரிக்ஸ் இமேஜிங் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். இருப்பினும் டாக்டர் யதீந்திராவுடன் 2016 இல் ஏற்பட்ட ஒரு சர்ச்சையைத் தொடர்ந்து இயக்குனர் பதவியை விட்டு விலகினார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. M Sripad, Ashwini (4 October 2020). "Former Congress MP's son joins BJP ahead of Sira bypoll". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  2. "Sira Assembly By-election Results Live Updates: Dr: C M Rajesh Gowda of BJP wins". News18. 10 November 2020. Archived from the original on 24 November 2020.
  3. Kumar, B. s Satish (25 October 2020). "People in Sira are aspiring for change as they want development: Rajesh Gowda". தி இந்து. Archived from the original on 1 November 2020.
  4. Joshi, Bharath (3 October 2020). "BJP inducts radiologist CM Rajesh Gowda ahead of Sira bypoll".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மு._ராஜேஷ்_கௌடா&oldid=3848394" இலிருந்து மீள்விக்கப்பட்டது