சீனக்குடா வானூர்தி நிலையம்

சீனக்குடா வானூர்தி நிலையம் (China Bay Airport) (ஐஏடிஏ: TRRஐசிஏஓ: VCCT) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அமைந்துள்ள வான்படைத் தளமும் உள்ளூர் வானூர்தி நிலையமும் ஆகும்.[1][2] திருகோணமலை நகரில் இருந்து 7 கிமீ தென்மேற்கே சீனக்குடாவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் திருகோணமலை வானூர்தி நிலையம் (Trincomalee Airport) என்றும் அழைக்கப்படுகிறது. குடியேற்றக் காலத்தில் பிரித்தானியரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நிலையத்தைப் பின்னர் இலங்கை வான்படையினர் தமது தேவைக்காகக் கையகப்படுத்தினர்.

சீனக்குடா விமான நிலையம்

China Bay Airport
චීන වරාය ගුවන්තොටුපළ
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவ/பொது
உரிமையாளர்இலங்கை அமைச்சரவை
இயக்குனர்இலங்கை வான்படை
சேவை புரிவதுதிருக்கோணமலை
அமைவிடம்சீனக்குடா, இலங்கை
கட்டளை அதிகாரிஎச். எம். எஸ். கே. கொட்டகதெனிய
உயரம் AMSL2 m / 7 ft
நிலப்படம்
TRR is located in இலங்கை
TRR
TRR
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
06/24 2,397 7,864 தார்

வரலாறு தொகு

1920களில் பிரித்தானியர் சீனக்குடாவில் தமது வான்தளம் ஒன்றை நிறுவினர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1942 மார்ச்சில் பிரித்தானிய வான்படையினர் இங்கு தமது தளத்தை அமைத்தன. ஹோக்கர் அரிக்கேன், ஸ்பிட்ஃபயர், கட்டலீனா போர் வானூர்திகள் இங்கு வந்திறங்கின.[3][4] இத்தளம் மீது 1942 ஏப்ரல் 9 இல் சப்பானியர் குண்டு வீசித் தாக்கினர்.[5][6] மலாயாவை யப்பானியரிடம் இருந்து கைப்பற்றுவதற்கு கூட்டுப் படையினருக்கு இவ்வான்தளம் மிகவும் உதவியாக இருந்தது. இவ்வான்தளத்தை பி29 குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தின.[3]

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னரும், பிரித்தானியர் கட்டுநாயக்காவினல் வான்படைத் தளத்தையும், திருகோணமலையில் கடற்படைத்தளத்தையும், தியத்தலாவையில் முகாம் ஒன்றையும் பேணி வந்தனர். திருகோணமலை கடற்படைத் தளம் சீனக்குடா வான்தளத்தையும் உள்ளடக்கியிருந்தது. 1952 ஆம் ஆண்டில் இங்கு பயணிகள் வானூர்திகளும் இறங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டன.[7] 1957 நவம்பரில் இலங்கையில் இருந்த அனைத்து பிரித்தானியப் படைத்தளங்களையும் இலங்கை அரசு பொறுப்பேற்றது.[8][3] 1976 மார்ச்சு மாதத்தில் சீனக்குடா வான்படைத்தளம் இலங்கை வான்படை அக்காதமியாக மாற்றப்பட்டது.[3] ஈழப்போர் ஆரம்பித்ததை அடுத்து 1987 சனவரி முதல் இத்தளம் மீண்டும் வான்படைத் தளமாக்கப்பட்டது.[3]

சேவைகளும் சேரிடங்களும் தொகு

பயணிகள் சேவை தொகு

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
சினமன் ஏர் கொழும்பு-கட்டுநாயக்கா, சிகிரியா
ஃபிட்ஸ்ஏர் கொழும்பு-இரத்மலானை, யாழ்ப்பாணம்
ஹெலிடூர்ஸ் கொழும்பு-இரத்மலானை
மிலேனியம் ஏர்லைன்சு கொழும்பு-கட்டுநாயக்கா, கொழும்பு-இரத்மலானை

சரக்கு சேவைகள் தொகு

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
லங்க்கன் கார்கோ கொழும்பு-இரத்மலானை

மேற்கோள்கள் தொகு

  1. "VCCT TRINCOMALEE / China-bay". Aeronautical Information Services of Sri Lanka, Airport & Aviation Services. Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
  2. "TRR - Airport". Great Circle Mapper.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "History of Air Force Base China Bay". இலங்கை வான்படை. Archived from the original on 2009-02-13. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
  4. "RAF Stations - C". Air of Authority - A History of RAF Organisation.
  5. Devarajah, Lloyd Rajaratnam (11 ஏப்ரல் 2010). "Ceylon’s Pearl Harbour attack". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/100411/Plus/plus_26.html. 
  6. Wijenayaka, Walter (5 ஏப்ரல் 2011). "Bombing of Colombo during world war II". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160307034134/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=22450. 
  7. "Sri Lankan Aviation History". Ministry of Civil Aviation, Sri Lanka. Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
  8. "Take over of Trincomalee a landmark event". சண்டே டைம்சு. 12 அக்டோபர் 2008. http://www.sundaytimes.lk/081012/FunDay/fundaytimes_2.html. 

வெளி இணைப்புகள் தொகு