சீரியம்(IV) புளோரைடு

வேதிச் சேர்மம்

சீரியம்(IV) புளோரைடு (Cerium(IV) fluoride) என்பது CeF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளை நிறத்தில் ஒரு படிகப்பொருளாகத் தோன்றும் சீரியம்(IV) புளோரைடு ஒரு வலுவான ஆக்சிஜனேற்றியாகும். நீரிலியாகவும் ஒற்றை நீரேற்றாகவும் இரண்டு வடிவங்களில் இச்சேர்மம் காணப்படுகிறது.[2] சீரியம் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

சீரியம்(IV) புளோரைடு
Cerium(IV) fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
சீரியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
10060-10-3 Y
ChemSpider 74302
EC number 626-760-9
InChI
  • InChI=1S/Ce.4FH/h;4*1H/q+4;;;;/p-4
    Key: SWURHZJFFJEBEE-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82331
  • F[Ce](F)(F)F
UNII A381976S11
பண்புகள்
CeF4
வாய்ப்பாட்டு எடை 216.11[1]
தோற்றம் வெண்மை நிறத்தூள்[1]
அடர்த்தி 4.77கி/செ.மீ3[1]
உருகுநிலை 650[1] °C (1,202 °F; 923 K)
கொதிநிலை n/a
n/a
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H319, H332, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

சீரியம்(III) புளோரைடு அல்லது சீரியம் ஈராக்சைடை 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரின் வாயுவைப் பயன்படுத்தி புளோரினேற்றம் செய்து சீரியம்(IV) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[3]

 
 

CeF4·xH2O, x≤1 என்ற இதனுடைய நீரேற்று வடிவத்தை 40% ஐதரோபுளோரிக் அமிலத்தை சீரியம்(IV) சல்பேட்டு கரைசலுடன் சேர்த்து 90 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்.[4]

பண்புகள் தொகு

இருமெத்தில் சல்பாக்சைடில் சீரியம்(IV) புளோரைடு கரைந்து [CeF4(DMSO)2] என்ற ஒருங்கிணைவுச் சேர்மம் உருவாகிறது.[4]

வேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Elements, American. "Cerium(IV) Fluoride". American Elements.
  2. 无机化学丛书 第七卷 钪 稀土元素 (Series of Inorganic Chemistry. Vol. 7. Scandium. Rare Earth Elements.). Science Press. pp 244-246. 1. Compounds of Halogens. (in Chinese)
  3. Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, S. 256.
  4. 4.0 4.1 Champion, Martin. J.D.; Levason, William; Gillian Reid (January 2014). "Synthesis and structure of [CeF4(Me2SO)2]—A rare neutral ligand complex of a lanthanide tetrafluoride". Journal of Fluorine Chemistry 157: 19–21. doi:10.1016/j.jfluchem.2013.10.014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்(IV)_புளோரைடு&oldid=3371368" இலிருந்து மீள்விக்கப்பட்டது