சீரியம் மோனோசெலீனைடு

வேதிச் சேர்மம்

சீரியம் மோனோசெலீனைடு (Cerium monoselenide) என்பது CeSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Ce3+Se2−(e) என்ற வடிவத்தில் இது காணப்படுகிறது.[2]

சீரியம் மோனோசெலீனைடு
இனங்காட்டிகள்
12014-83-4 Y
InChI
  • InChI=1S/Ce.Se
    Key: LNUVLVYMHRNGRT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Se].[Ce]
பண்புகள்
CeSe
தோற்றம் ஊதா நிறத் திண்மம்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு NaCl-வகை (கனசதுரம்)
புறவெளித் தொகுதி Fm3m (எண். 225)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீரியம் மோனோசல்பைடு
சீரியம் மோனோ தெலூரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

சீரியம் செலீனைடுடன் சோடியம் உலோகத்தைச் சேர்த்து 600° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஒடுக்க வினை நிகழ்ந்து சீரியம் மோனோசெலீனைடு உருவாகிறது. சீரியம் செலீனைடுடன் கால்சியம் உலோகத்தைச் சேர்த்து 1000° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினாலும் ஒடுக்க வினை நிகழ்ந்து சீரியம் மோனோசெலீனைடு உருவாகிறது.[2]

Ce2Se3 + 2Na → 2CeSe + Na2Se

சீரியம் செலீனைடுடன் சீரியம் ஈரைதரைடு சேர்த்து வினைபுரியச் செய்தாலும் சீரியம் மோனோசெலீனைடு உருவாகும்:[1]

Ce2Se3 + CeH2 → 3 CeSe + H2

பண்புகள் தொகு

பல அரியமண் மோனோசால்கோசெனைடுகளைப் போலவே, சீரியம் மோனோசெலீனைடும் உலோக-வகை மின் கடத்துத்திறன் மற்றும் NaCl-வகை படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Obolonchik, V. A.; Mikhlina, T. M. Synthesis of rare earth metal monoselenides(in உருசிய மொழி). Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1968. 4(2): 287-8. ISSN:0002-337X
  2. 2.0 2.1 洪广言. 现代化学基础丛书 第36卷 稀土化学导论. 北京: 科学出版社, 2014. pp. 62-63. 2. 稀土硒化物 ISBN 978-7-03-040581-4
  3. Smolensky, G. A.; Adamjan, V. E.; Loginov, G. M. (1968-02-01). "Antiferromagnetic Properties of Light Rare Earth Monochalcogenides". Journal of Applied Physics (AIP Publishing) 39 (2): 786–790. doi:10.1063/1.2163619. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8979. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்_மோனோசெலீனைடு&oldid=3813377" இலிருந்து மீள்விக்கப்பட்டது