சுகோய் எஸ்.யு-27

சுகோய் எஸ்.யு-27 என்பது ஒற்றை இருக்கை கொண்ட ஒலியை விட வேகமாகச் செல்லும் சண்டை விமானமாகும். இது சோவியத் வான்படைக்காக சுகோய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நான்காம் தலைமுறை விமானங்களுக்குப் போட்டியாக சோவியத் ஒன்றியத்தால் களமிறக்கப்பட்டதாகும். எஸ்.யு-27 ஆனது முற்றிலும் வான் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்பட்டாலும், எல்லாவகையான தாக்குதலுக்கும் ஏற்றதாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் எப்-15 ஈகிள் விமானத்திற்கு இணையானதாகும்.

எஸ்.யு-27
வகை பல்வகை தாக்குதல் வானூர்தி
உற்பத்தியாளர் சுகோய் நிறுவனம்
வடிவமைப்பாளர் சுகோய் நிறுவனம்
முதல் பயணம் 20 மே 1977
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
பயன்பாட்டாளர்கள் ரஷ்ய வான்படை, யுக்ரெய்னிய வான்படை, சீன வான்படை
உற்பத்தி 1984–present
தயாரிப்பு எண்ணிக்கை 680
அலகு செலவு US$30 மில்லியன்
Variants சுகோய் எஸ்யு-30, சுகோய் எஸ்யு-33, சுகோய் எஸ்யு-34, சுகோய் எஸ்யு-35, சுகோய் எஸ்யு-37, செங்யாங் ஜே-11

இதை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு விமானங்கள் தயாரிக்கப்பட்டன. எஸ்.யு-30 என்பது இரட்டை இருக்கை கொண்ட பல் நோக்கு தாக்குதல் விமானமாகும். எஸ்.யு-33 என்பது கடற்படைக்காக இடைமறித்துத் தாக்கும் வகையில் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்து இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாகும். மேலும் அருகருகே இருக்கைகளைக் கொண்ட எஸ்.யு-34 என்னும் தரைத்தாக்குதல் விமானத்தையும், எஸ்.யு-35 என்னும் மிகச்சிறிந்த தாக்குதல் விமானமும் தயாரிக்கப்பட்டன.

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுகோய் சு 27
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோய்_எஸ்.யு-27&oldid=3357268" இலிருந்து மீள்விக்கப்பட்டது