சுங்கை காடுட்

சிரம்பான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்

சுங்கை காடுட் (ஆங்கிலம்: Sungai Gadut; மலாய் மொழி: Sungai Gadut) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சுங்கை காடுட்
Sungai Gadut
நெகிரி செம்பிலான்
சுங்கை காடுட் தொடருந்து நிலையம்
சுங்கை காடுட் தொடருந்து நிலையம்
Map
ஆள்கூறுகள்: 2°40′N 102°00′E / 2.667°N 102.000°E / 2.667; 102.000
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்

சுங்கை காடுட் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. அனைத்துலக அளவில் சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் செனவாங் தொழிற்சாலைப் பகுதி, மாநிலத்தின் இரண்டாவது மிக முக்கியமான தொழில்துறைப் பகுதியாக விளங்குகிறது.

பொது தொகு

இந்த நகரப் பகுதி மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை   (North–South Expressway Southern Route); செனவாங் சந்திப்பு (Senawang Junction); கூட்டரசு சாலை 1 (மலேசியா)  ; மற்றும் சுங்கை காடுட் சாலை N5 வழியாக இணைக்கப்பட்டு உள்ளது.

அருகிலுள்ள நகரங்கள் தொகு

அருகிலுள்ள வீடுமனை குடியிருப்புகள் தொகு

  • தாமான் துவாங்கு ஜபார் - Taman Tuanku Jaafar
  • பண்டார் சிரம்பான் செலாத்தான் - Bandar Seremban Selatan
  • தாமான் பெங்கீரான் செனவாங் - Taman Pinggiran Senawang
  • தாமான் செனவாங் பெர்டானா - Taman Senawang Perdana
  • லாடாங் சிரம்பான் - Ladang Seremban
  • கம்போங் உலு ரந்தாவ் - Kg. Ulu Rantau
  • தாமான் ஸ்ரீ பெர்த்தாமா - Taman Sri Pertama

சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி தொகு

சுங்கை காடுட் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 565 மாணவர்கள் பயில்கிறார்கள். 44 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1][2]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD4081 சிரம்பான் தோட்டம் SJK(T) Ladang Seremban சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி சுங்கை காடுட் 565 44

மேற்கோள் தொகு

  1. "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
  2. "SJK(T) Ladang Seremban - This school has been selected for School Transformation Programme 2025 (TS25) by Ministry of Education". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2022.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கை_காடுட்&oldid=3923015" இலிருந்து மீள்விக்கப்பட்டது