சுசிமா

மௌரிய இளவரசன்

சுசிமா (Susima) (கி.மு.304 - கி.மு. 270) இவர் மெளரியப் பேரரசின் இளவரசரும், இரண்டாம் மெளரியப் பேரரசரான பிந்துசாரரின் மூத்த மகன் மற்றும் பிந்துசாரரின் மரபுரிமையான வாரிசும் ஆவார். பேரரசர் பிந்துசார்ருக்கு அடுத்ததாக சிம்மாசனத்தை அலங்கரிக்க இருந்தார். [1] ஆனால், இளைய ஒருவழிச்சகோதரனான அசோகரால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்பு அசோகர் மூன்றாம் மெளரியப் பேரரசர் ஆனார்.

பிறப்பு மற்றும் குடும்பம் தொகு

சுசிமா இரண்டாம் மெளரியப் பேரரசர் பிந்துசாரரின் மூத்த மகனாவார். அசோகரின் தாயாரான சுபத்ராங்கியின் சக்களத்தி அரசியாக சுசிமாவின் தாயார் இருந்தார். [2] பிந்துசாரருக்கு அசோகரை விட சுசிமாவின் மீதே விருப்பம் இருந்தது.

நிர்வாகம் தொகு

சுசிமா தட்சசீலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அசோகர் உஜ்ஜைனிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். சுசிமாவின் அதிகாரிகளால் மக்கள் ஏராளமான துன்பத்திற்கு ஆளாகினர். அதனால், மக்கள் சுசிமாவிற்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அசோகர் தட்சசீலத்திற்குச் சென்ற போது புரட்சியாளர்கள் பரிசுகளுடன் வரவேற்றுள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Singh, Upinder (2009), A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century (3rd impr. ed.), New Delhi: Pearson Longman, p. 331, ISBN 9788131716779
  2. Gupta, Subhadra Sen (2009). "Taxila and Ujjaini". Ashoka. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8184758073. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசிமா&oldid=2772099" இலிருந்து மீள்விக்கப்பட்டது