சுஜாதா விஜயராகவன்

இந்திய எழுத்தாளர், நடனக் கலைஞர்

சுஜாதா விஜயராகவன் (Sujatha Vijayaraghavan) நடனக் கலைஞர், இசைக்கலைஞர், இசைக்கலைஞர் மற்றும் நுண்கலை ஆராய்ச்சி அறிஞர் என பன்முகங்கள் கொண்ட ஓர் இந்திய எழுத்தாளராவார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராக பணியாற்றினார். [1] [2] தமிழ்நாட்டின் சென்னை நகரிலுள்ள நாரத கான சபையின் பாரம்பரிய கலைப் பிரிவுகளில் ஒன்றான நாட்டிய அரங்கம் பிரிவுடன் இணைந்து இவர் இயங்கினார். அமெரிக்காவின் சிக்காக்கோ நகரிலுள்ள நாட்டிய நடன திரையரங்கு என்ற பாரம்பரிய பரதநாட்டிய நிறுவனத்தோடும் இணைந்து செயல்பட்டார். [3] மேலும் இவர் முன்னோடி பரதநாட்டிய நடனக் கலைஞர் கலாநிதி நாராயணனுடன் தொடர்பு கொண்டிருந்தார் .

தமிழ் பட வர்ணம் திட்டத்தில் மூத்த உறுப்பினராக இருந்த சுஜாதா ஆண்டவன் பிச்சை மற்றும் கும்பகோணம் பானுமதி போன்ற பரதநாட்டிய நடனக் கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த பல ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் . அனிதா குகா, போன்ற நடனக் கலைஞர்களுடன் இணைந்து பரதநாட்டிய நடன தயாரிப்புத் திட்டங்களிலும் இவர் ஒத்துழைத்துள்ளார். தேவி பாரதம் என்ற இசையமைப்பில் பெரும் புகழ்பெற்றார் : இது பங்கிம் சந்திர சாட்டர்ச்சி எழுதிய தேசிய பிரார்த்தனை பாடலும் சுப்பிரமணிய பாரதி தமிழில் மொழிபெயர்த்த பாடலுமான வந்தே மாதரம் என்ற பாடலை அடிப்படையாகக் கொண்ட இசை நிகழ்வாகும்.

நூல் விளக்கம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "National seminar on women in Indian English fiction on March 9". Coastal Digest (in ஆங்கிலம்). 6 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
  2. "Women in Alice Walker's Fiction". Indian Journal of American Studies (American Studies Research Centre, Osmania University) 27: 88. 
  3. Warnecke, Lauren (9 November 2019). "Review: Natya Dance's world premiere 'Inai' asks, what if there were no differences, racial or otherwise?". Chicago Tribune. பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_விஜயராகவன்&oldid=3253089" இலிருந்து மீள்விக்கப்பட்டது