சுன் சூ (மரபு சீனம்: 孫子, எளிய சீனம்: 孙子, பின்யின்: Sūn Zǐ சுன் த்சு) என்பவர், படை வியூகங்கள் பற்றிய, மிகவும் புகழ் பெற்ற, பண்டைய சீன நூலான போர்க் கலை என்னும் நூலை எழுதினார் என நம்பப்படுகின்றது. இது தாவோயிச முறைகளுக்கான ஒரு முதன்மையான எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுகின்றது. இவர் உண்மையாக வாழ்ந்த ஒரு வரலாற்று மனிதரா இல்லையா என்பதில் சர்ச்சை நிலவுகிறது. மரபுவழிக் கதைகள் இவரை கிமு 544-496 காலப்பகுதியில் வாழ்ந்த வூ என்னும் அரசரிடம் வீரம் மிக்க தளபதியாக இருந்தவர் என்கின்றன. இவர் ஒரு வரலாற்று மனிதர்தான் என்பதை ஏற்றுக்கொள்ளும் அறிஞர்கள், இவரது நூலில் காணப்படும் விபரங்களைக் கொண்டு இவர், சீனாவில் நாடுகள் போரிட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியைச் (கிமு 403-221) சேர்ந்தவராக இருக்கலாம் என்கின்றனர். மரபுவழிக் கதைகளின் படை இவரது வழிவந்தவரான சுன் பின் என்பவரும் பறைத்துறை நுட்பங்கள் பற்றி நூலொன்று எழுதியிருப்பதாகத் தெரிவிக்கின்றன.

சுன் சூ
யூரிஹாமா, தோத்தோரி, ஜப்பானிலுள்ள சுன் சூவின் சிலை
பிறப்புதெரியாது
இறப்புதெரியாது
தொழில்படைத் தளபதி
காலம்கிமு 722–481 அல்லது கிமு 403–221 (சர்ச்சைக்கு உரியது)
கருப்பொருள்படைத்துறை நுட்பம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்போர்க் கலை

போர்கலை நூலின் எழுத்தாளராகவும், வரலாற்றுப் புகழ் கொண்ட ஒருவராகவும், சுன் சூ, சீனாவினதும், பிற ஆசிய நாடுகளினதும் வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர். 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில், போர்க் கலை நூல், மேல்நாட்டுச் சமூகத்திலும் பெயர் பெற்றதுடன், செயல்முறைத் தேவைகளுக்கும் பயன்பட்டது.

வாழ்க்கை தொகு

சுன் சூவின் பிறந்த இடம் பற்றிய தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை.அனால்தி ஸ்ப்ரிங் அண்ட் ஆடும்ன் அந்னல்ஸ் "என்னும் புத்தகம் சுன் சூ "கி" என்னும் இடத்திலும்,பிந்தைய நூலான "ரெகார்ட்ஸ் ஒப் தி கரண்ட் ஹிஸ்டோரியன் (ஷிஜி )"சுன் சூ "வு " என்னும் இடத்தில் பிறந்தார் என்று தெரிவிக்கிறது ஆனால் அவ்விரண்டு புத்தகங்களும் சுன் சூ,சீனாவின் கடைசி வசந்தம் மற்றும் இலையுதிர்காலத்தில் (722-481 கிமு )பிறந்தவர் என்பதை ஒப்புக்கொள்கின்றன.மற்றும் அவர் கடைசி கி.மு. ஆறாம்நூற்றாண்டில்(கிமு. 512) ஆலோசகராகவும்,'வு',அரசர் 'ஹெலு' அவர்களுக்கு சேவை புரிந்ததாகவும் தெரிகிறது. சுன் சூவின் ஆலோசனைப்படி அவ்வரசர்கள் வெற்றி கண்டனர்.அதுவே அவரை 'போர்கலை '(தி ஆர்ட் ஒப் வார்) எழுத தூண்டியது.

வாழ்க்கைச் சம்பவம் தொகு

ஒருமுறை அவரிடம் அரசர் 'ஹெலு' பெண்களை பயன்படுத்தி துருப்புகள் எப்படி கையாளுவது பற்றி ஒரு செயல்விளக்கம் தர சொன்னார்.அவரும் ஒப்புகொண்டார். அரசர் 'ஹெலு' தம் அரண்மனையிலிருந்த 180 பெண்களை சுன் சூவிடம் ஒப்படைத்தார்.சுன் சூ அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து மன்னருக்கு நெருக்கமான இரு பெண்களை அதற்கு உத்தரவு அதிகாரியாக நியமித்தார். பயிற்சியும் தொடங்கியது ,அவர்களிடம் 'தாம் இடப்பக்கம் பார்க்கச் சொன்னால் இடப்பக்கமும் வலப்பக்கம் பார்க்கச் சொன்னால் வலப்பக்கமும் பார்க்கச் சொன்னார், ஆனால் அப்பெண்கள் சரியாகச் செய்யாமல் அலட்சியம் செய்தனர்.உடனே அந்த பெண் அதிகாரிகளிடம்"நீங்கள் சொன்ன உத்தரவை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றாலோ,செயல்படுத்த மறுத்தாலோ உத்தரவு அதிகாரிகள் மீதுதான் தவறு",என்றார்.ஆயினும் அப்பெண்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தனர்.உடனே சுன் சூ,அவ்விரு பெண்கள் தலையையும் துண்டிக்க செய்து. அடுத்த இரண்டு பெண்களையும் நியமித்தார். பின்னர் பயிற்சி வகுப்புகள் கச்சிதமாக நடந்தன.

தி ஆர்ட் ஒப் வார் தொகு

சிஜி மன்னரும் அவரது கூற்றுக்கள் போரில் வெற்றிக்கரமாக அமைகின்றன என்பதால் நீங்கள்"போர்கலை "என்னும் புத்தகத்தை தாங்கள் எழுத வேண்டும் என்றார்."போர்க்கலை"(தி ஆர்ட் ஆப் வார் )சுன் சூவினால் எழுதப்பட்ட இந்நூல் போரின் தத்துவத்தையும், போரின் போது ஏற்படும் இடையூறுகளை தகர்த்து,வெற்றி பெறுவதையும் பற்றி கூறுகிறது.இந்நூல் அனைவராலும் தலைசிறந்த படைப்பாக ஏற்றுக்கொள்ளப் பட்டு,போற்றப்படுகிறது.

இப்புத்தகம் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.மற்றும் 1980ல் இவரது வாழ்க்கையை சாங்ஜிஷாங் என்பவர் "பிக் செங் "என்னும் பெயரில் 40 அத்தியாயங்கள் கொண்ட வரலாற்று நாடகமாக உருவாக்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுன்_சூ&oldid=3859787" இலிருந்து மீள்விக்கப்பட்டது