சுப்ரதா பால்

விளையாட்டு வீரர்கள்

சுப்ரதா பால் (Suprata Pal- பிறப்பு: நவம்பர் 24, 1986) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து வீரராவார். இவர் இந்திய கால்பந்து அணி மற்றும் பிரயாக் யுனைடெட் கால்பந்துக் கழகத்துக்கு இலக்கு காப்பாளராக (கோல் கீப்பர்) ஆடிவருகிறார். முன்னதாக இவர் டாடா கால்பந்து பயிற்சிக் கழகத்துக்காக ஆடியிருக்கிறார்;[1] கொல்கத்தாவைச் சேர்ந்த மோகன் பகங் கால்பந்துக் கழகத்துக்காக ஆடும்போது இவரது பெயர் இந்திய கால்பந்து வட்டங்களில் ஓங்கியொலிக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகு புனே கால்பந்துக் கழகத்துக்காக மூன்று பருவங்கள் ஆடியுள்ளார்; தற்போது பிரயாக் யுனைடெட்-டுக்கு ஆடிவருகிறார். ஆகத்து 2007-ல் நேரு கோப்பை பன்னாட்டு கால்பந்து போட்டியை முதல் முறையாக வென்ற இந்திய கால்பந்து அணியில் பங்குவகித்தார். மேலும் 27 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கோப்பைக்கு (2011) தகுதிபெற்று, பங்குபெற்ற இந்திய கால்பந்து அணியிலும் பங்குவகித்தார்.

சுப்ரதா பால்
சுய தகவல்கள்
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
ஆடும் நிலை(கள்)இலக்கு காப்பாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பிரயாக் யுனைடெட்
இளநிலை வாழ்வழி
2001-2004டாடா கால்பந்து பயிற்சிக் கழகம்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2004-2007Mohun Bagan0(0)
2007–2009East Bengal40(0)
2009-2012Pune40(1)
2012-presentPrayag United0(0)
பன்னாட்டு வாழ்வழி
2002-04India U16??(0)
2004-06India U19??(0)
2007India U23??(0)
2007-presentஇந்தியா45(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 25 August 2012 அன்று சேகரிக்கப்பட்டது.

குறிப்புதவிகள் தொகு

  1. "Soccernetindia-Home of Indian football - Content". Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2012-09-17.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரதா_பால்&oldid=3783315" இலிருந்து மீள்விக்கப்பட்டது