சுமித்ரா தேவி (நடிகை)

இந்திய நடிகை

சுமித்ரா தேவி (Sumitra Devi) (listen) (நீலிமா சட்டோபாத்யாய்) (22 சூலை 1923 - 28 ஆகத்து 1990) 1940களிலும், 1950களிலும் பாலிவுட், மேற்கு வங்காளத் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஓர் இந்திய நடிகையாவார்.[4] [5] [6] 1952ஆம் ஆண்டு தாதா குஞ்சால் இயக்கிய மம்தா என்ற இந்திப் படத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் நினைவு கூறப் படுகிறார். இவர் இரண்டு முறை வங்காளத் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். [7] [8] இவர் தனது காலத்தின் நேர்த்தியான அழகிகளில் ஒருவராக இருந்தார். மேலும், பிரதீப் குமார், உத்தம்குமார் போன்ற சக கலைஞர்களால் இவரது காலத்தின் மிக அழகான பெண்ணாக கருதப்பட்டார்.[9] [10][11] [12] [13]

சுமித்ரா தேவி
1956இல் சுமித்ரா தேவி
தாய்மொழியில் பெயர்সুমিত্রা দেবী
பிறப்புநீலிமா சட்டோபாத்யாய்[1]
(1923-07-22)22 சூலை 1923 [1][2]
சியுரி, பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம்[1]
இறப்பு28 ஆகத்து 1990(1990-08-28) (அகவை 67) [1]
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தேசபந்து மகளிர் உயர்நிலைப் பள்ளி, கொல்கத்தா[1]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1944-1964
குறிப்பிடத்தக்க படைப்புகள்சந்தி
மேரி பெஹன்
பதேர் தேவி
அபிஜோக்
வாழ்க்கைத்
துணை
தேவி முகர்ஜி
பிள்ளைகள்bulbul[3]
விருதுகள்வங்காளத் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சிறந்த நடிகைக்கான விருது.[1]
சகாப்தம்1940s
1950s

சுடசரிதை தொகு

சுமித்ரா தேவி, மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்திலுள்ளா சியுரி என்ற இடத்தில் என்ற ஒரு பணக்கார பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞரான முரளி சட்டோபாத்யாய் என்பவருக்கு மகளாக பிறந்தார்.[1] தனது இளம் வயதில், மூத்த நடிகை கனன் தேவியின் அழகால் பெரிதும் ஈர்க்கப்பட்டு ஓர் நடிகையாக ஆசைப்பட்டார்.[14] [15]

தொழில் தொகு

1943ஆம் ஆண்டில் இவர் நியூ தியேட்டர்ஸ் என்ற படத் தயாரிப்பு அலுவலகத்தில் ஒரு பட வாய்ப்புக்காக அவழைக்கப்பட்டார். ஹேம்சந்தர் சந்தரின் மேரி பஹென் (1944) என்ற படத்தில் கே.எல். சைகலுக்கு இணையாக நடித்தார். [16] இந்த படத்தின் தயாரிப்பின் போது அபூர்பா மித்ராவின் சந்தி என்ற வங்காளத் திரைப்படத்தில் (1944) இவர் கதாநாயகியாக நடித்தார். [16] இந்த படம் மகத்தான வெற்றியை பெற்றது . மேலும், 1945இல் வங்காளத் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றது. [1] 1940களின் பிற்பகுதியில் இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வசியத்நாமா (1945), பாய் தூஜ் (1947), ஊஞ்ச் நீச் (1948) , விஜய் யாத்ரா (1948) போன்ற படங்களில் நடித்தார். [1] குஞ்சாலின் மம்தா (1952) படத்தில் ஒற்றை தாயாக நடித்ததற்காக இவர் பாராட்டப்பட்டார். [16] தீவானா (1952), குங்க்ரூ (1952), மயூர்பங்க் (1954), சோர் பஜார் (1954), ஜக்தே ரஹோ (1956) போன்ற படங்களில் நடித்ததற்காகவும் இவர் மேலும் பாராட்டப்பட்டார். [1]

அபிஜாக் (1947), பதேர் தேவி (1947), பிரதீபாத் (1948), ஜாய்ஜத்ரா (1948), சுவாமி (1949), தேவி சவுத்ராணி (1949), சமர் (1950), தஸ்யு மோகன் (1955) போன்ற மேற்கு வங்காளத் திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.[16] கார்த்திக் சட்டோபாத்யாயின் சாஹேப் பீபி கோலம் என்ற படத்தில் (1956) ஒரு நில உரிமையாளரின் மது அடிமையான அழகிய மனைவியாக இவர் சித்தரிக்கப்பட்டார். இது பிமல் மித்ரா என்பவர் எழுதி அதே பெயரில் வெளியான உன்னதமான புதினத்தின் தழுவலாகும். ஐம்பதுகளின் பிற்பகுதியில் , சீனாவில் நடந்த ஆசியத் திரைப்பட விழாவிற்கு இந்தியாவிலிருந்து ஒரு பிரதிநிதியாக அழைக்கப்பட்டார்.

குடும்பம் தொகு

இவரது சகோதரரின் பெயர் ரணஜித் சட்டோபாத்யாய். இவர், பீகாரின் முசாபர்பூரில் வளர்க்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஒரு பெரிய பூகம்பம் காரணமாக முசாபர்பூரில் உள்ள இவர்களது வீடும் நிலமும் சேதமடைந்த பின்னர் இவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தது.[17]

 
மம்தா (1952) என்ற படத்தில் சுமித்ரா தேவி

திருமணம் தொகு

சுமித்ரா தேவி, 21 அக்டோபர் 1946 இல் நடிகர் தேவி முகர்ஜியை மணந்தார்.[1] 1 திசம்பர் 1947 இல், இவர்களுக்கு புல்புல் என்ற மகன் பிறந்தார். இவரது கணவர் முகர்ஜி 11 டிசம்பர் 1947 அன்று காலமானார். [18]

மேற்கோள்கள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Sumitra Devi – Interview (1952)". cineplot.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-02."Sumitra Devi – Interview (1952)". cineplot.com. Retrieved 2 February 2018.
  2. "Sumitra Devi". Friday Moviez. Archived from the original on 2019-08-24. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
  3. Gooptu, Sharmistha (2010-11-01) (in en). Bengali Cinema: 'An Other Nation'. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781136912160. https://books.google.com/books?id=ugbGBQAAQBAJ&q=sumitra+devi+actress&pg=PT199. 
  4. "Sumitra Devi movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  5. "Sumitra Devi". www.gomolo.com. Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.
  6. lyricstashan.com. "Best Sumitra Devi song lyrics collection - LyricsTashan". lyricstashan.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
  7. "10 Greatest Bengali Actresses of All Time". https://www.thecinemaholic.com/best-bengali-actresses/. 
  8. "Sumitra Devi – Interview (1952)". cineplot.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-02.
  9. "Ten Most Beautiful Actresses of Bengali Cinema". filmsack.jimdo.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-04-06. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
  10. "Sumitra Devi – The sedative and gorgeous Indian actress of 1940s to 1960s". My Words & Thoughts (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-06-18. பார்க்கப்பட்ட நாள் 2019-07-23.
  11. Stobok, Author (2017-06-01). "Sumitra Devi – An Unsurpassable Beauty Before the Genre of Suchitra Sen". Filmzack. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15. {{cite web}}: |first= has generic name (help)Stobok, Author (1 June 2017). "Sumitra Devi – An Unsurpassable Beauty Before the Genre of Suchitra Sen". Filmzack. Retrieved 15 July 2017.
  12. Majumdar, Neepa (2010-10-01). Wanted Cultured Ladies Only!: Female Stardom and Cinema in India, 1930s-1950s. https://books.google.com/books?id=TdM2Ben3alIC&q=sumitra+devi+actress. 
  13. Bose, Mihir (2008-05-09). Bollywood: A History. https://books.google.com/books?id=hN6mBAAAQBAJ&q=sumitra%20devi%20actress. 
  14. "Ten Most Beautiful Actresses of Bengali Cinema". filmsack.jimdo.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-04-06. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18."Ten Most Beautiful Actresses of Bengali Cinema" பரணிடப்பட்டது 2017-04-06 at the வந்தவழி இயந்திரம். filmsack.jimdo.com. Retrieved 18 March 2017.
  15. "Sumitra Devi : An Unsurpassable beauty of Bengali cinema". filmsack.jimdo.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-01-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-16.
  16. 16.0 16.1 16.2 16.3 Stobok, Author (2017-06-01). "Sumitra Devi – An Unsurpassable Beauty Before the Genre of Suchitra Sen". Filmzack. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15. {{cite web}}: |first= has generic name (help)
  17. "Sumitra Devi : An Unsurpassable beauty of Bengali cinema". filmsack.jimdo.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-01-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-16."Sumitra Devi : An Unsurpassable beauty of Bengali cinema" பரணிடப்பட்டது 2018-01-07 at the வந்தவழி இயந்திரம். filmsack.jimdo.com. Retrieved 16 July 2017.
  18. অদম্য ছিল তার আকর্ষণ by Snehashish Chattopadhyay. Bhashyo (2007, November ed.)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரா_தேவி_(நடிகை)&oldid=3555095" இலிருந்து மீள்விக்கப்பட்டது