சுய இன்பம் (masturbation) என்பது ஒருவர் தன் பாலுறுப்பைத் தூண்டி கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுதல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும். சுயமாக பாலுறுப்புக்களை தூண்டுவது மட்டுமல்லாது, ஒருவர் மற்றவருடைய பாலுறுப்புக்களைத் தூண்டி கிளர்ச்சி அடையச்செய்வதும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.

சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்
சுய இன்பத்தில் ஈடுபடும் பெண் "Mulher sentada de coxas abertas", 1916 drawing by Gustav Klimt

மனிதரில் குழந்தைப்பருவம் தொட்டே இந்நடத்தையைக் காணலாம். இந்நடத்தையும் இது தொடர்பான பொது உரையாடலும் சமூக அளவில் அங்கீகாரம் பெறாததோடு மதங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கலாச்சார சூழலில் தவறான செயற்பாடாகவும், தீமை பயக்கும் நடத்தையாகவும் கற்பிக்கப்படுகிறது.

சுய இன்பத்துக்கென பல்வேறு கருவிகளும் உபகரணங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சுய இன்பமும் பாலுறவும் பாலூட்டி உயிரினங்களில் காணப்படும் இரு மிகப்பொதுவான பாலியல் நடத்தைகளாகும். இரண்டும் தம்மளவில் தனித்துவமானவை என்பதோடு, ஒன்றுக்கு ஒன்று மாற்றாக அமைபவை அல்ல.

விலங்கு இராச்சியத்தில் சுய இன்பமானது பல பாலூட்டும் விலங்குகளில் காணப்படுகிறது. வளர்ப்புப் பிராணிகளிலும், காடுகளில் வாழும் பிராணிகளிலும் இந்நடத்தையை காணலாம்.

உடல்நலம்

அமெரிக்க மருத்துவ சங்கம் 1972 இல் ஒருமித்த கருத்தினால் சுய இன்பம் இயல்பான ஒன்று என அறிவித்தது.[1] இது ஒருவரின் உடலின் ஆற்றலைக் குறைக்காது[2], முன்கூட்டிய விந்து தள்ளல் ஏற்படாது.[3] சுயஇன்பம் என்பது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான மற்றும் உளவியல் ரீதியாக இயல்பான பழக்கம் என்பது மருத்துவ உலகின் ஒருமித்த கருத்தாகும்.[4][5][6][7][8][9]

சுய இன்பம் குறித்து தவறாகப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தனியார் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் சுயஇன்பத்தைப் பற்றியதான பயம் மக்களிடையே உள்ளது. சுய இன்பத்தால் எந்த விதமான பாதிப்புகளும் வராது என மருத்துவ உலகம் கூறுகிறது. இதனை நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கல்ல என்று நிருபித்துள்ளார்கள்.

வரலாறு

உலகெங்கிலும் உள்ள வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களில் ஆண் மற்றும் பெண் சுயஇன்பத்தின் சித்தரிப்புகள் உள்ளன. ஆரம்பகால பதிவுகளில் இருந்து, பழங்கால சுமேரியர்கள் பாலுறவில் மிகவும் நிதானமான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தனர்.[10] சுயஇன்பம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் ஆற்றலை மேம்படுத்தும் என்று சுமேரியர்கள் பரவலாக நம்பினர்.[10]

பண்டைய கிரேக்கர்கள் சுயஇன்பத்தை மற்ற வகையான பாலியல் இன்பங்களுக்கு ஒரு சாதாரண மற்றும் ஆரோக்கியமான மாற்றாகக் கருதினர்.[11]

மேற்கோள்கள்

  1. Planned Parenthood Federation of America (March 2003). "Masturbation: From myth to sexual health". Contemporary Sexuality 37 (3): v. பன்னாட்டுத் தர தொடர் எண்:1094-5725. இணையக் கணினி நூலக மையம்:37229308. "Finally, the American medical community pronounced masturbation as normal in 1972 American Medical Association publication, Human Sexuality (Rowan, 2000).". 
  2. McKinley Health Center (2 ஏப்பிரல் 2008). "Masturbation: Questions and Answers" (PDF). University of Illinois at Urbana-Champaign. Archived from the original (PDF) on 28 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2017.
  3. Strassberg, Donald S.; Mackaronis, Julia E.; Perelman, Michael A. (2015). "Sexual dysfunctions". in Blaney, Paul H.; Krueger, Robert F.; Millon, Theodore. Oxford textbook of psychopathology (Third ). NY: Oxford University Press. பக். 441–442. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-981177-9. இணையக் கணினி நூலக மையம்:879552995. https://books.google.com/books?id=VoEZBAAAQBAJ&q=editions:n7U-Dq0ClTsC&pg=PA442. 
  4. Brown, George R. (April 2021). "Overview of Sexuality - Special Subjects". Merck Manuals Professional Edition. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
  5. Porter, Robert S.; Kaplan, Justin L., தொகுப்பாசிரியர்கள் (2011). "Chapter 165. Sexuality and Sexual Disorders". The Merck Manual of Diagnosis & Therapy (19th ). Whitehouse Station, NJ: Merck Sharp & Dohme Corp., A Subsidiary of Merck & Co., Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-911910-19-3 இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. http://www.merckmanuals.com/home/mental_health_disorders/sexuality/overview_of_sexuality.html. பார்த்த நாள்: 19 June 2014. 
  6. Shpancer, Noah (29 September 2010). "The Masturbation Gap. The pained history of self pleasure". Psychology Today. http://www.psychologytoday.com/blog/insight-therapy/201009/the-masturbation-gap. பார்த்த நாள்: 27 June 2013. "The publication of Kinsey's and Masters and Johnson's research revealed that masturbation was both common and harmless. Many studies have since confirmed this basic truth, revealing in addition that masturbation is neither a substitute for "real" sex nor a facilitator of risky sex.". 
  7. Coon, Dennis; Mitterer, John O. (2014). "11. Gender and Sexuality". Introduction to Psychology: Gateways to Mind and Behavior (14 ). Cengage Learning. பக். 363. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-305-54500-7. https://books.google.com/books?id=-4jCBAAAQBAJ&pg=PA363. "Is there any way that masturbation can cause harm? Seventy years ago, a child might have been told that masturbation would cause insanity, acne, sterility, or other such nonsense. "Self-abuse," as it was then called, has enjoyed a long and unfortunate history of religious and medical disapproval (Caroll, 2013). The modern view is that masturbation is a normal sexual behavior (Hogarth & Ingham, 2009). Enlightened parents are well aware of this fact. Still, many children are punished or made to feel guilty for touching their genitals. This is unfortunate because masturbation itself is harmless. Typically, its only negative effects are feelings of fear, guilt, or anxiety that arise from learning to think of masturbation as "bad" or "wrong." In an age when people are urged to practice "பாதுகாப்பான பாலுறவு," masturbation remains the safest sex of all." 
  8. Sigel, Lisa Z. (Summer 2004). "Masturbation: The History of the Great Terror by Jean Stengers; Ann Van Neck; Kathryn Hoffmann". Journal of Social History 37 (4): 1065–1066. doi:10.1353/jsh.2004.0065. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4529. https://archive.org/details/sim_journal-of-social-history_summer-2004_37_4/page/1065. "Stengers and Van Neck follow the illness to its fairly abrupt demise; they liken the shift to finally seeing the emperor without clothes as doctors began to doubt masturbation as a cause of illness at the turn of the twentieth century. Once doubt set in, scientists began to accumulate statistics about the practice, finding that a large minority and then a large majority of people masturbated. The implications were clear: if most people masturbated and did not experience insanity, debility, and early death, then masturbation could not be held accountable to the etiology that had been assigned it. Masturbation quickly lost its hold over the medical community, and parents followed in making masturbation an ordinary part of first childhood and then human sexuality.". 
  9. Wood, Kate (March 2005). "Masturbation as a Means of Achieving Sexual Health by Walter Bockting; Eli Coleman". Culture, Health & Sexuality 7 (2): 182–184. பன்னாட்டுத் தர தொடர் எண்:1369-1058. "In the collection's introductory chapter, Eli Coleman describes how Kinsey's research half a century ago was the first in a series of studies to challenge widely prevalent cultural myths relating to the 'harmful' effects of masturbation, revealing the practice to be both common and non-pathological. Subsequent research, outlined by Coleman in this chapter, has shown masturbation to be linked to healthy sexual development, sexual well-being in relationships, self-esteem and bodily integrity (an important sexual right). As such, the promotion and de-stigmatization of the practice continue to be important strategies within sexology for the achievement of healthy sexual development and well-being.

    The collection concludes with two surveys among US college students. The first of these was based on limited quantitative questions relating to masturbation. The findings suggest that masturbation is not a substitute for sexual intercourse, as has often been posited, but is associated with increased sexual interest and greater number of partners. The second of these surveys asks whether masturbation could be useful in treating low sexual desire, by examining the relationship between masturbation, libido and sexual fantasy.".
     
  10. 10.0 10.1 Dening, Sarah (1996). "Chapter 3: Sex in Ancient Civilizations". The Mythology of Sex. London, England: Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-02-861207-2. http://www.ishtartemple.org/myth.htm. 
  11. Rosenfeld, Jennie (2008). Talmudic Re-readings: Toward a Modern Orthodox Sexual Ethic. பக். 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-549-43458-0. https://books.google.com/books?id=4e6TnaciudcC&pg=PA133. 

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுய இன்பம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுய_இன்பம்&oldid=3914026" இலிருந்து மீள்விக்கப்பட்டது