சுரேசுவரி கோயில்

இந்தியாவின் ஒடிசாவிலுள்ள இந்து கோயில்

சுரேசுவரி கோயில் (Sureswari temple) இந்தியாவின் ஒடிசா மாநிலம், சுபர்ணபூர் மாவட்டத்தில் உள்ள சோனிப்பூரில் உள்ள கோவில் நகரத்தில் அமைந்துள்ளது. மகாநதி மற்றும் டெல் நதி சங்கமிக்கும் தென்மேற்கில் டெல் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள இக்கோயில் சுர்சூரி கோயில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. முதன்மை தெய்வம் மா சுர்சூரி அம்மனாகும். மேலும் இது பழமையான சக்தி ஆலயங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. ஒடிசாவின் மேற்குப் பகுதியில் அதிகபட்ச மக்கள் மா சுர்சூரியை பக்தியோடு வழிபடுகின்றனர். சுரேசுவரி என்ற சொல் சுர்சூரியின் சமசுகிருதப் பதிப்பாகும்.[1]

சுரேசுவரி கோவில்
Sureswari temple
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:சுபர்ணபூர் மாவட்டம்
அமைவு:சோனிப்பூர், ஒடிசா
கோயில் தகவல்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "BONA FIDE SHAKTI PEETHAS OF STATE - OrissaPOST". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேசுவரி_கோயில்&oldid=3875584" இலிருந்து மீள்விக்கப்பட்டது