சுவாமி பிரேமானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)

சுவாமி பிரேமானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் பாபுராம்.இவரது பெற்றோர் தாரா பிரசன்ன கோஷ், மாதங்கினி தேவி. இவர் சிறுவனாக இருந்த போது ஜோரசங்கோ என்ற இடத்திலுள்ள ஹரி சபையில் பாகவதச் சொற்பொழிவு கேட்கச் சென்ற இடத்தில் குருதேவரை முதன்முதலாக பார்த்தார்.இவரது உறவினரான பலராம் போஸும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தர்.இவரது வகுப்புத் தோழனான ராக்கால் (பின்னாளில் சுவாமி பிரம்மானந்தர்) அடிக்கடி ராமகிருஷ்ண பரமஹம்சரை தட்சிணேசுவரம் சென்று தரிசித்து வந்தார்,அவருடம் தாமும் சென்றார்.தமது குருவால் ஈசுவர கோடிகளில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்டவர்.[1]

சுவாமி பிரேமானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)
சுவாமி பிரேமானந்தர்
பிறப்பு1861 டிசம்பர் 10
கல்கத்தாவிலுள்ள ஆன்ட்பூர் கிராமம்
இறப்பு1918 ஜூலை 30
பலராம் பாபுவின் வீடு
இயற்பெயர்பாபுராம் கோஷ்
குருஸ்ரீராமகிருஷ்ணர்

மேற்கோள்கள் தொகு

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 135-189