சூரியக் காந்தவரை

சூரிய கண்காணிப்பில், ஒரு காந்தவரை (magnetogram)என்பது சூரிய காந்தப்புலத்தின் வலிமையின் இடஞ்சார்ந்த மாறுபாடுகளின் உருவகமாகும்.

சூரிய இயக்கவியல் ஆய்வகத்தில் உள்ள சூரியநடுக்க, காந்தப் படம்பிடிப்பி உருவாக்கிய ஒரு காந்தவரை

சூரியக் காந்தவரைகள் சூரிய காந்த வரைவிகளால் பதியப்படுகின்றன. சில காந்தவரைகள் காந்தப்புல வலிமையின் முழுமையான மதிப்பை மட்டுமே அளவிடுகின்றன, மற்றவை முப்பருமானக் காந்தப்புலத்தை அளவிடும் திறன் கொண்டவை. பிந்தையவை நெறியன் காந்தப்பதிவிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடுகள் சீமன் விளைவு அல்லது, குறைவாக அடிக்கடி, கான்லே விளைவு பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. [1]

1908 ஆம் ஆண்டு ஜார்ஜ் எல்லேரி ஏல் என்பவரால் முதல் காந்தப் பதிவி கட்டப்பட்டது

மேற்கோள்கள் தொகு

  1. "Magnetogram Chromosphere Observed from Mt. Wilson Solar Observatory". National Centers for Environmental Information. பார்க்கப்பட்ட நாள் 4 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியக்_காந்தவரை&oldid=3838904" இலிருந்து மீள்விக்கப்பட்டது