சூரிய அணில்

சூரிய அணில் (Sun squirrel) (கெலியோசியூரசு பேரினம்), என்பது செரினே துணைக் குடும்பத்தின் கீழ் வரும் புரோட்டோக்செரினி அணிலாகும். இவை துணை சஹாரா ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன.

சூரிய அணில்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: சுரிடே
Tribe: புரோடாக்சுஎரினி
பேரினம்: கெலியோசியூரசு

டுரோசார்ட், 1880
சிற்றினங்கள்[1]
  • கெலியோசியூரசு காம்பியானசு
  • கெலியோசியூரசு மூடாபிலிசு
  • கெலியோசியூரசு பங்டேடசு
  • கெலியோசியூரசு ருஃபோபிராச்சியம்
  • கெலியோசியூரசு உருவென்சோரி
  • கெலியோசியூரசு உண்டுலட்டசு

மரக் கிளைகளில் வெயில் நேரத்தில் படுத்து சூரிய குளியலில் ஈடுபடுவதால் இப்பெயரினைப் பெற்றிருக்கலாம்.

காங்கோ மக்களாட்சிக் குடியரசில் மனிதனில் குரங்கு அம்மை பரவுவதில் இந்த சூரிய அணில் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தப் பேரினத்தின் கீழ் 6 சிற்றினங்கள் உள்ளன:

  • காம்பியன் சூரிய அணில், கெலியோசியூரசு காம்பியானசு
  • மாற்றக்கூடிய சூரிய அணில், கெலியோசியூரசு மூடாபிலிசு
  • சிறிய சூரிய அணில், கெலியோசியூரசு பங்டேடசு
  • சிவப்பு-கால் சூரிய அணில், கெலியோசியூரசு ருஃபோபிராச்சியம்
  • உருவென்சோரி சூரிய அணில், கெலியோசியூரசு உருவென்சோரி
  • சான்ஜ் சூரிய அணில், கெலியோசியூரசு உண்டுலட்டசு

மேற்கோள்கள் தொகு

  1. Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. ISBN 0-8018-8221-4. OCLC 26158608.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_அணில்&oldid=3124360" இலிருந்து மீள்விக்கப்பட்டது