செங்கதிர் (சிற்றிதழ்)

செங்கதிர் இலங்கையில் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய பண்பாட்டுப் பல்சுவை மாதாந்த இதழ்.

செங்கதிர்
இதழாசிரியர்செங்கதிரோன்
வகைஇலக்கியம்
இடைவெளிமாதம் ஒரு முறை
முதல் வெளியீடு2008 சனவரி
நாடுஇலங்கை

முதலாவது இதழ் தொகு

2008ஆம் ஆண்டு சனவரி மாதம் (தி.வ. ஆண்டு 2039) வெளிவந்தது.

பணிக்கூற்று தொகு

இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை.

நிர்வாகம் தொகு

பிரதம ஆசிரியர்: செங்கதிரோன். துணை ஆசிரியர்: அன்பழகன் குருஸ், தலைமை அலுவலகம்: மட்டக்களப்பில் அமைந்துள்ளது.

சிறப்பு தொகு

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் வரிசையில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் செங்கதிர் ஈழத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளிலும் வாசிக்கப்பட்டு வருகின்றது.

அதிதிப் பக்கம் தொகு

ஒவ்வொரு இதழிலும் கலை, இலக்கிய, பொருளாதார, அறிவியல் துறைகளில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் ஒவ்வொருவர் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர்.

உள்ளடக்கம் தொகு

நீத்தார் நினைவுகள். இலக்கிய கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், புது எழுத்தாளர் அறிமுகம், பிரபலமான எழுத்தாளர்களின் எனக்குப் பிடித்தமதை, ஆய்வுக் கட்டுரைகள், இளங்கதிர்(இளையோர் பக்கம்), வாசகர் வட்டம், குறுக்கெழுத்துப் போட்டி, தேடல், நினைவிதைத் தோய்தல், நூல்வரவு, பூங்கதிர் (மகளிர் பக்கம்), இலக்கியச் சந்திப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கதிர்_(சிற்றிதழ்)&oldid=1921269" இலிருந்து மீள்விக்கப்பட்டது