செங்கால் கல்திருப்பி உள்ளான்

செங்கால் கல்திருப்பி உள்ளான் (ruddy turnstone)(Arenaria interpres) என்பது 1758ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயசால் சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் திரிங்கா இன்டர்பிரெசு என்ற இருசொல் பெயரில் முறைப்படி விவரிக்கப்பட்ட பறவைச் சிற்றினம் ஆகும்.[2]

செங்கால் கல்திருப்பி உள்ளான்
Adult in breeding plumage.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
கல்திருப்பி உள்ளான்
இனம்:
A. interpres
இருசொற் பெயரீடு
Arenaria interpres
(Carl Linnaeus, 10th edition of Systema Naturae 1758)
வேறு பெயர்கள்

Tringa interpres Linnaeus, 1758

வகைப்பாட்டியல் தொகு

1760ஆம் ஆண்டில் பிரெஞ்சு விலங்கியல் வல்லுனரான மாதுரின் சாக் பிரிசனால் அறிமுகப்படுத்தப்பட்ட அரேனாரியா பேரினத்தில் உள்ள கருப்பு கல்திருப்பி உள்ளானுடன் இந்த சிற்றினம் இப்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.[3][4]

அரேனாரியா என்ற பேரினத்தின் பெயர், இலத்தீன் சொல்லான அரேனேரியசு, "மணலில் வசிக்கும்", என்பதில், "மணல்" என்பதிலிருந்து வந்தது. குறிப்பிட்ட சிற்றினப் பெயரான இண்டெர்பிரசு என்பதற்கு "தூதர்" என்று பொருள். 1741-இல் கோட்லாண்டிற்குச் சென்றபோது, ​​லின்னேயசு சுவீட மொழிச் சொல்லான, டோல்க், "பெயர்ப்பாளர்" என்பது இந்த சிற்றினத்திற்குப் பொருந்தும் என்று நினைத்தார். ஆனால் உள்ளூர் பேச்சுவழக்கில் இந்த வார்த்தை "கால்கள்" என்று பொருள்படும். மேலும் இது பவளக்காலிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[5]

துணையினங்கள் தொகு

இரண்டு துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

  • அ. இ. இண்டெர்பிரசு (லின்னேயசு, 1758) - வடகிழக்கு கனடா, கிறீன்லாந்து, வடக்கு ஐரோப்பாவில் இருந்து வடகிழக்கு சைபீரியா மற்றும் மேற்கு அலாசுகா வரை இனப்பெருக்கம் செய்கின்றன; குளிர்காலங்களில், மேற்கு, தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தெற்கு, கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா, அமைதித் தீவுகள், மேற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு மெக்சிக்கோ
  • அ. இ. மோரினெல்லா (லின்னேயஸ், 1766) - வடகிழக்கு அலாசுகா மற்றும் வடக்கு கனடாவில் இனப்பெருக்கம்; தென் அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்கா வரை குளிர்காலம்

விளக்கம் தொகு

செங்கால் கல்திருப்பி உள்ளான் மிகவும் சிறிய மற்றும் வலிமையான பறவை ஆகும். இதனுடைய உடல் நீளம் 22 முதல் 24 செ.மீ. வரையிலானது. நேரான கூம்பு வடிவிலான கருப்பு அலகும், வெள்ளை நிற மோவாயும், தொண்டையும் இதனை அடையாளம் காண உதவுபவை. கரும்பழுப்பான உடலையும் வெண்மையான பின்முதுகு, பிட்டம் ஆகியவற்றையும் பெற்றிருக்கும். பிட்டத்தில் கருப்புநிற குறுக்குப் பட்டையைக் காணலாம். முன் கழுத்தும், மார்பின் பக்கங்களும் பழுப்பு நிறத்தன. வயிறும், வாலடியும் வெண்மையானவை. கால்கள் 3.5 செ.மீ. (1.4 அங்குலம்) நீளத்தில், மிகவும் குறுகியதாகவும் பிரகாசமான ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

காணப்படும் பகுதிகள் தொகு

செங்கால் கல்திருப்பி உள்ளான், வடக்கு அட்சரேகைகளில் இனப்பெருக்கம் செய்கிறது, பொதுவாக கடலிலிருந்து சில கிலோமீட்டர்களுக்கு மேல் இல்லை. துணையினங்கள் அ. இ. மொரினெல்லா வடக்கு அலாசுகாவிலும், ஆர்க்டிக் கனடாவில் கிழக்கே பாபின் தீவு வரையிலும் காணப்படுகிறது. அ. இ. இண்டெசெப்சு மேற்கு அலாசுகா, எல்லெசுமியர் தீவு, கிரீன்லாந்து, நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, எசுடோனியா மற்றும் வடக்கு உருசியாவில் காணப்படுகின்றது. இது முன்னர் செர்மனியின் பால்டிக் கடற்கரையில் வளர்க்கப்பட்டது. இசுகாட்லாந்து மற்றும் பரோயே தீவுகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.

அமெரிக்காவில், வாசிங்டன் மற்றும் மாசசூசெட்சிலிருந்து தென் அமெரிக்காவின் தெற்கு முனை வரையிலான கடற்கரையோரங்களில் இந்த இனங்கள் குளிர்காலத்தில் வலசை செல்கின்றன. இருப்பினும் சிலி மற்றும் அர்கெந்தினாவின் தெற்குப் பகுதிகளில் இது அரிதாகவே காணப்படுகிறது. பால்க்லாந்து தீவுகளில் காணப்படுவது உறுதிப்படுத்தப்படாத தகவலாக உள்ளது.

ஐரோப்பாவிலிருந்து, ஐசுலாந்து, நார்வே மற்றும் டென்மார்க்கின் தெற்குப் பகுதிக்கு குளிர்காலம் வலசை வருகின்றன. மத்திய தரைக்கடல் கடற்கரைகளில் சிறிய எண்ணிக்கையில் மட்டுமே காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில், பல கடல் தீவுகளில் அதிக எண்ணிக்கையுடன் தென்னாப்பிரிக்கா வரை இது பொதுவாக காணப்படுகிறது. ஆசியாவில், தெற்கு சீனா மற்றும் சப்பான் (முக்கியமாக ரியுக்யு தீவுகளில்) வரையும் குளிர்காலத்தில் தெற்கில் பரவலாக காணப்படுகிறது. இது தசுமேனியா மற்றும் நியூசிலாந்துக்கு தெற்கேயும் பசிபிக் தீவுகளிலும் காணப்படுகிறது

உணவு தொகு

 
இந்தியாவில் காணப்படும் கல்திருப்பி உள்ளான்

சிறு குழுவாக மணலில் சிறு கற்களைப் புரட்டி அவற்றின் அடியே பதுங்கியிருக்கும் சிறு பூச்சிகளைப் பிடிக்கும் பழக்கம் உடையதால் இப்பெயர் பெற்றுள்ளது. கடல் நத்தை. நண்டு மணலில் காணப்படும் தத்துக்கிளி முதலியன இதன் உணவு. பறக்க எழும்போது சிறு குரல் கொடுக்கும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Arenaria interpres". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Linnaeus, Carl (1758). Systema Naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis (in Latin). Vol. 1 (10th ed.). Holmiae (Stockholm): Laurentii Salvii. p. 148.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Brisson, Mathurin Jacques (1760). Ornithologie, ou, Méthode Contenant la Division des Oiseaux en Ordres, Sections, Genres, Especes & leurs Variétés (in French and Latin). Paris: Jean-Baptiste Bauche. Vol. 1, p. 48, Vol. 5, p. 132.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Sandpipers, snipes, coursers". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 November 2021.
  5. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 54, 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  6. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:45