செனோய்

இந்தியாவின் ஒடிசாவில் உள்ள சிங்கோயில் இருந்து வந்த இனக்குழு

மலேசியப் பழங்குடியினரின் முப்பெரும் பிரிவுகளில் ஒன்று. அவற்றில் செனோய் (Senoi) என்பது மலாய் தீபகற்பத்தில் உள்ள ஒரு பிரிவினர் ஆகும். இவர்கள் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியான பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் வாழ்கின்றனர்.[1]

மக்கள் தொகையும் துணைப்பிரிவுகளும் தொகு

தீபகற்ப மலேசியாவில் செனோய் மக்கள் தொகை மொத்தம் 60,633. இந்த செனோய் மக்களில் ஆறு பிரிவுகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:

  • செவொங் பிரிவு 234 பேர்கள்
  • ஜ ஹூட் பிரிவு 2,594 பேர்கள்
  • மா மெரி பிரிவு 3,503 பேர்கள்
  • செமாய் பிரிவு 34,248 பேர்கள்
  • செமாக் பெரி பிரிவு 2,348 பேர்கள்
  • டெமியார் பிரிவு 17,706 பேர்கள்[2])

ஆக மொத்தம்: 60,633 பேர்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. Salma Nasution Khoo & Abdur-Razzaq Lubis (2005). Kinta Valley: Pioneering Malaysia's Modern Development. Areca Books. பக். 355. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-98-342-1130-1. 
  2. Tarmiji Masron, Fujimaki Masami & Norhasimah Ismail (October 2013). "Orang Asli in Peninsular Malaysia: Population, Spatial Distribution and Socio-Economic Condition" (PDF). Journal of Ritsumeikan Social Sciences and Humanities Vol.6. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனோய்&oldid=3412432" இலிருந்து மீள்விக்கப்பட்டது