சென்காகு தீவு விவகாரம்

சென்காகு தீவுகள் விவகாரம் (Senkaku Islands dispute) என்பது சப்பானியர்கள் சென்காகு என்றும், சீனர்கள் டயாயு என்றும் [1] தாய்வான் மக்கள் டியாயுதய் என்றும்[2] அழைக்கும் கிழக்கு சீன கடலில் உள்ள ஆளில்லாத் தீவுக்குழுமமான சென்காகு தீவுகளின் உரிமை குறித்தான பிணக்கு ஆகும். சப்பானின் ஆட்சியில் இருக்கும் இந்தத் தீவுக் குழுமத்தை சீன மக்கள் குடியரசும் (PRC) [3]சீனக் குடியரசும் (ROC)[4] உரிமை கொண்டாடி வருகின்றன. இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்கா 1945 முதல் 1972 வரை ஆக்கிரமித்திருந்தது.[5] இத்தீவுகளை அமெரிக்கா சப்பானிடம் ஒப்படைக்கும்போதே இரு சீன நாடுகளும் இத்தீவுகள் மீதான தங்கள் உரிமையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் முறையிட்டிருந்தன.[6] இத்தீவுகளில் உள்ள எண்ணெய், கனிம மற்றும் மீன்பிடி வளங்களுக்கு ஆளுமை உள்ள நாட்டிற்கு முழு அதிகாரம் கிடைக்கும் .[7] இத்தீவுகளின் உரிமை எந்த நாட்டிற்குரியது என்பதைக் குறித்து அமெரிக்கா அலுவல்முறையான அறிவிப்பை வெளியிடாதபோதும்[8] அமெரிக்காவிற்கும் சப்பானிற்கும் இடையே ஒப்பிட்ட இராணுவ உடன்பாட்டின்படி இத்தீவுகளை காக்க சப்பான் எடுக்கும் எந்த இராணுவ நடவடிக்கைக்கும் அமெரிக்கா துணை நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.[9]

1978ஆம் ஆண்டு சப்பானின் சுற்றுலாத்துறையால் எடுக்கப்பட்ட சென்காகு தீவுகளில் ஒன்றான யோட்சுரி-ஜிமாவின் வான்வழி ஒளிப்படம்

செப்டம்பர் 2012இல் சப்பான் சர்ச்சைக்குரிய இத்தீவுக் குழுமத்தில் மூன்று தீவுகளை தேசியமயமாக்கியுள்ளது. இதனை அடுத்து சீனாவில் சப்பானுக்கெதிராக பெருமளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது .[10] சீனா,சப்பான் நாடுகளுக்கு இடையில் ஆண்டுக்கு $ 34,500 கோடி அளவுக்கு வணிகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் உள்ள சப்பானின் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலைகள் மீது மக்கள் திடீர் தாக்குதல் நடத்திச் சூறையாடினர். சப்பானிய நிறுவனம் தயாரிக்கும் தானுந்துகள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன. [11]

மேற்கோள்கள் தொகு

  1. Ogura, Junko (2010-10-14). "Japanese party urges Google to drop Chinese name for disputed islands". CNN World. CNN (US) இம் மூலத்தில் இருந்து 2012-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121004161611/http://articles.cnn.com/2010-10-14/world/japan.google.disputed.islands_1_diaoyu-islands-chinese-fishing-captain-senkaku-islands?_s=PM%3AWORLD. 
  2. Kristof, Nicholas (Sept. 10, 2010). "Look Out for the Diaoyu Islands". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் Aug. 15, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. Netherlands Institute for the Law of the Sea (NILOS). (2000). International Organizations and the Law of the Sea, pp. 107-108., p. 107, கூகுள் புத்தகங்களில்
  4. Lee, Seokwoo et al. (2002). Territorial disputes among Japan, Taiwan and China concerning the Senkaku Islands, pp. 11-12., p. 11, கூகுள் புத்தகங்களில்
  5. By JOHN W. FINNEYSpecial to The New York Times (1971-11-11). "SENATE ENDORSES OKINAWA TREATY - Votes 84 to 6 for Island's Return to Japan - Rioters There Kill a Policeman Senate, in 84 to 6 Vote, Approves the Treaty Returning Okinawa to Japan - Front Page - NYTimes.com". Select.nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  6. http://www.ioc.u-tokyo.ac.jp/~worldjpn/documents/texts/JPCH/19720520.O1C.html
  7. "Japanese nationals land on disputed Senkaku islands". Zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  8. Philip J. Crowley, Remarks to the Press United States Department of State, 23 September 2010
  9. "U.S. says Senkaku Islands fall within scope of Japan-U.S. security treaty". Kyodo News. Archived from the original on 2012-07-15. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  10. "Anti-Japan protesters rally in Beijing". Agence France-Presse இம் மூலத்தில் இருந்து 2012-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120916235209/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hlNEQu71YWu6gU5grASp4oCCtPMg?docId=CNG.94f2aee15fe6c666bf80f346b88c4ec4.71. 
  11. "சீனாவில் மக்கள் போராட்டம் ஜப்பான் நிறுவனங்கள் சூறை". தினகரன். 18 செப்டம்பர் 2012. Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்காகு_தீவு_விவகாரம்&oldid=3728771" இலிருந்து மீள்விக்கப்பட்டது