செம்தேத் நசிர்

ஈராக்கின் தொல்லியல்களம்

செம்த்தேத் நசிர் (Jemdet Nasr) (அரபு மொழி: جمدة نصر) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில் செம்தேத் நசிர் காலத்திய (கிமு 3100–2900), பண்டைய சுமேரிய பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒரு தொல்லியல் மேடும், சுமேரிய நகரமும் ஆகும். இது தற்கால ஈராக்கின் பாபில் ஆளுநகரத்தில் உள்ளது. இது கிஷ் நகரததிற்கு தென்கிழக்கே 26 கிமீ தொலைவில் உள்ளது.

செம்தேத் நசிர்
தொல்லியல் மேடு

جمدة نصر
செம்தேத் நசிர் is located in ஈராக்
செம்தேத் நசிர்
இருப்பிடம்ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்32°43′01″N 44°46′44″E / 32.717°N 44.779°E / 32.717; 44.779
வகைதொல்லியல் மேடு
பகுதிபாபில் ஆளுநரகம், ஈராக்
பரப்பளவு1.5 எக்டேர்கள் (3.7 ஏக்கர்கள்) (தொல்லியல் மேடு (அ), 7.5 எக்டேர்கள் (19 ஏக்கர்கள்) (தொல்லியல் மேடு ஆ)
உயரம்2.9 மீட்டர்கள் (9 அடி 6 அங்) '(தொல்லியல் மேடு (அ), 3.5 மீட்டர்கள் (11 அடி) ,(தொல்லியல் மேடு ஆ)
வரலாறு
கட்டுமானப்பொருள்களிமண் & செங்கல்
காலம்உபைதுகள் காலம், உரூக் காலம், செம்தேத் நசிர் காலம், துவக்க வம்சம் 1, பார்த்தியர்கள் காலம்?
கலாச்சாரம்சுமேரிய நாகரீகம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1926, 1928, 1988, 1989
அகழாய்வாளர்ஸ்டீபன் ஹெர்பர்ட் லாங்டன், எல்.சிஎச். வாட்டெலின், ஆர். மாத்தியூஸ்
சோப்புக்கல்லில் செய்யப்பட்ட செம்தேத் நசிர் பண்பாட்டுக் காலத்திய உருளை வடிவ முத்திரை, கபாஜா தொல்லியல் களம், ஈராக்
ஆப்பெழுத்துகளுடன் கூடிய செம்தேத் நசிர் (கிமு 3100 - 2700) காலத்திய இரட்டைக் கல் சிற்பங்கள்

தொல்லியல் ஆய்வாளர்கள் தொகு

செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டை 1926-இல் ஸ்டீபன் ஹெர்பர்ட் லாங்டன் ஆய்வு செய்தபோது களிமண் செங்கற் கட்டிடத்தில் ஆப்பெழுத்து கொண்ட களிமண் பலகைகளை கண்டெடுத்தார். இத்தொல்லியல் மேடு சுமேரிய அரசு நிர்வாகத்தின் மையமாக இருந்ததை அறிந்தார்.[1] 1928-இல் இத்தொல்லியல் மேட்டை மீண்டும் அகழ்வாய்வு செய்தனர்.

1980-இல் பிரித்தானிய தொல்லியலாளர் ரோஜர் மாத்தியூஸ் இத்தொல்லியல் மேட்டை மீண்டும் அகழ்வாய்வு செய்ததில் இப்பகுதி உபைதுகள் காலம், உரூக் காலம், முதல் துவக்க வம்ச காலத்தியது எனக்கண்டறிந்தார்.

ஆய்வின் வரலாறு தொகு

1926-இல் கிஷ் தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்த போது கிடைத்த களிமண் பலகைகள் மற்றும் ஓவியம் தீட்டப்பட்ட பீங்கான் பாண்டங்கள், கிஷ் நகரத்திற்கு தென்கிழக்கே 26 கிமீ தொலைவில் உள்ள செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் தொல்பொருள்கள் போன்று இருப்பதை அறிந்தனர்.[2] எனவே செம்தேத் நசிர் தொல்லியல் களத்தை மீண்டும் அகழாய்வு செய்யதனர்.[3] செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டில் பெரிய அளவிலான களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிட அமைப்புகளும், சுமேரியாவின் துவக்க கால ஆப்பெழுத்துக்களில் எழுதப்பட்ட பல களிமண் பலகைகள் அகழாய்வில் கண்டெடுத்தனர்.[3] இத்தொல்பொருள்களை பாக்தாத் அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகம் மற்றும் சிக்காக்கோ அருங்காட்சியக ங்களுக்கு ஆய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.[4] 1928-இல் மீண்டும் இத்தொல்லியல் களாத்தை எல்.சிஎச். வாட்டேலின் என்பவர் 120 பணியாளர்களுடன் அகழாய்வு செய்தார்.[3] அவரது அகழாய்வில் ஏதும் கிடைக்கவில்லை.

பின்னர் மீண்டும் 1988 மற்றும் 1989 ஆண்டுகளில் இத்தொல்லியல் களத்தை பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ரோஜர் மாத்தியூஸ் தலைமையில் அகழாய்வு செய்யப்பட்டது.[5]

உரூக் காலத்திற்கும் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் காலம்த்திற்கும் இடையே விளங்கிய செம்தேத் நசிர் காலத்தை தொல்லியல் அறிஞர்கள் 1930-இல் மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றில் இணைத்தனர்.

செம்தேத் நசிர் தொல்லியல் களத்தில் கீழ் மெசொப்பொத்தேமியாவில் இருந்த சமகாலத்திய தொல்லியல் களங்கள் அபு சலாபிக், சுருப்பக், நிப்பூர், ஊர் மற்றும் உரூக் ஆகும்.[6] செம்தேத் தொல்லியல் மேட்டின் காலம் கிமு 3100 - கிமு 2900 காலத்தியது என கணித்துள்ளனர்.[7]

செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் அமைப்பு தொகு

செம்தேத் நசிர் தொல்லியல் மேடு இரண்டு தொகுதிகளைக் கொண்டது. அதில் முதல் தொல்லியல் மேடு 160 மீட்டர் நீளம், 140 மீட்டர் அகலம், 2.9 மீட்டர் உயரத்துடன் கூடியது. மொத்தப்பரப்பளவு 1.5 ஹெக்டேர் ஆகும்.

இரண்டாம் தொல்லியல் களம் 350 மீட்டர் நீளம், 300 அகலம், 3.5 மீ உயரத்துடன், 7.5 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.[8]

தொல்பொருள் பண்பாடு தொகு

செம்தேத் நசிர் தொல்லியம் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட துவக்க கால சுமேரிய ஆப்பெழுத்து களிமண் பலகைகளாலும், சுவஸ்திக்கா சின்னம், பறவைகள், மரங்கள், பாம்பு, தேள், ஆடு, மீன்கள், சிங்கம் போன்ற உருவங்களுடன் வண்ணம் தீட்டப்பட்ட, அழகிய பீங்கான் பெரிய ஜாடிகள், கிண்ணங்கள், குடுவைகள் போன்ற பாத்திரங்களாலும் புகழ் பெற்றது. இக்காலத்தில் நகரத்தின் மையத்தில் நிறுவப்பட்டிருந்த களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட பெரிய கட்டிட அமைப்புகளுக்கும் பெயர் பெற்றது.[9]

மேலும் இத்தொல்லியல் மேட்டில் கண்டெடுத்த களிமண் பலகையில் அச்சடித்த உருளை வடிவ முத்திரைகள் மற்றும் வில்லை முத்திரைகள் புகழ்பெற்றவையாகும்.[10]

உரூக் காலத்தின் தொடர்ச்சியே இக்களிமண் உருளைவடிவ முத்திரைகள். இவ்வுருளை வடிவ முத்திரைகளில் மனித உருவங்கள், விலங்குகள் உருவம், கட்டிடங்களின் அமைப்புகள் பதியப்பட்டுள்ளது. ஒரு களிமண் பலகை முத்திரையில் செம்தேத் நகரத்தைச் சுற்றியிருந்த லார்சா, நிப்பூர், ஊர், உரூக் போன்ற சுமேரிய நகரங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது.[11]

இத்தொல்லியல் களத்தில் சிறிதளவு செப்புப் பொருட்களே கிடைத்துள்ளது. மேலும் மாவு அரைக்கும் கல் அமைப்புகள் கிடைத்துள்ளது. மேலும் களிமண்ணால் செய்த சில பொருட்கள் கிடைத்துள்ளது.[12]

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Stephen Langdon, New Texts from Jemdet Nasr, Journal of the Royal Asiatic Society, pp. 837-844, 1931
  2. Ernest Mackay, Report on the Excavations at Jemdet Nasr, Iraq, Field Museum of Natural History. Anthropology, Memoirs, vol. I, no. 3, Chicago, 1931
  3. 3.0 3.1 3.2 Matthews 1992, ப. 1–3
  4. Matthews 2002, ப. 4
  5. Matthews 1989
  6. Pollock 1990, ப. 58
  7. Pollock 1999, ப. 2
  8. Matthews 1989, ப. 225–228
  9. Matthews 2002, ப. 20–21
  10. Roger J. Matthews, Cities, Seals and Writing: Archaic Seal Impressions from Jemdet Nasr and Ur, Materialien zu den frühen Schriftzeugnissen des Vorderen Orients, vol. 2, Berlin: Gebr, Mann Verlag, 1993, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3786116868
  11. Matthews 2002, ப. 17–19
  12. Matthews 2002, ப. 30–32

மேற்கோள்கள் தொகு

  • Englund, Robert K.; Grégoire, Jean-Pierre (1991), The Proto-Cuneiform Texts from Jemdet Nasr. I: Copies, Transliterations and Glossary, Materialien zu den frühen Schriftzeugnissen des Vorderen Orients, vol. 1, Berlin: Gebr. Mann, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7861-1646-6
  • Matthews, Roger (1989), "Excavations at Jemdet Nasr, 1988", Iraq, 51: 225–248, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/4200306, JSTOR 4200306
  • Matthews, Roger (1990), "Excavations at Jemdet Nasr, 1989", Iraq, 52: 25–39, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/4200315, JSTOR 4200315
  • Matthews, Roger (1992), "Defining the Style of the Period: Jemdet Nasr 1926-28", Iraq, 54: 1–34, JSTOR 4200350
  • Matthews, Roger (2002), Secrets of the Dark Mound: Jemdet Nasr 1926-1928, Iraq Archaeological Reports, vol. 6, Warminster: BSAI, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85668-735-9
  • Pollock, Susan (1990), "Political Economy as Viewed from the Garbage Dump: Jemdet Nasr Occupation at the Uruk Mound, Abu Salabikh", Paléorient, 16 (1): 57–75, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3406/paleo.1990.4519
  • Pollock, Susan (1999), Ancient Mesopotamia. The Eden that never was, Case Studies in Early Societies, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-57568-3
  • Woods, Christopher (2010), "The Earliest Mesopotamian Writing" (PDF), in Woods, Christopher (ed.), Visible Language. Inventions of Writing in the Ancient Middle East and Beyond, Oriental Institute Museum Publications, vol. 32, Chicago: University of Chicago, pp. 33–50, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-885923-76-9, archived from the original (PDF) on 2021-08-26, பார்க்கப்பட்ட நாள் 2019-10-31

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்தேத்_நசிர்&oldid=3732269" இலிருந்து மீள்விக்கப்பட்டது