செயவீர சிங்கையாரியன்

செயவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த ஒரு அரசனாவான். இவனது தந்தையான வீரோதய சிங்கையாரியன் எதிர்பாராமல் மரணமானதைத் தொடர்ந்து இளம் வயதிலேயே முடி சூட்டிக் கொண்டவன் இவன்.

கண்டியரசனுடன் போர் தொகு

செயவீரன், தன் காலத்தில் கண்டியை ஆண்ட புவனேகபாகு என்பவனுடன் போரிட்டு அவனை வென்றதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறும். பின்னர் பராக்கிரமபாகு என்பவன் பாண்டியன் முன்னிலையில் திறை தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு இழந்த நாட்டைப் பெற்று ஆட்சி செய்து வந்தான். இவனும் இவனுக்குப் பின் வந்தவர்களும் செயவீரன் காலம் வரையில் திறை செலுத்தி வந்தனர் என்பது வைபவமாலையின் கூற்று.

செயவீரன் மரணம் தொகு

நீண்டகாலம் வெற்றிகரமாக ஆட்சி புரிந்த செயவீரன், காலமானபின் இவன் மகனான குணவீர சிங்கையாரியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயவீர_சிங்கையாரியன்&oldid=3246162" இலிருந்து மீள்விக்கப்பட்டது