செய்யூர் வட்டம்

செய்யூர் வட்டம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக செய்யூர் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் செய்யூர், லத்தூர், கடப்பாக்கம், கோடூர், சுணம்பேடு, காயப்பாக்கம் என 6 உள்வட்டங்களும், 121 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 206,019 ஆகும். அதில் 103,169 ஆண்களும், 102,850 பெண்களும் உள்ளனர். 50,475 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 73.16% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 997 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20958 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 97,823 மற்றும் 2,227 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.69%, இசுலாமியர்கள் 2.06%, கிறித்தவர்கள் 1.85% மற்றும் பிறர் 0.41% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யூர்_வட்டம்&oldid=3674240" இலிருந்து மீள்விக்கப்பட்டது