சேலம் ஆடைகள் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் பகுதியில் தயாரிக்கப்படும் ஆடைகளை குறிப்பதாகும். இந்திய ஒன்றிய அரசு 2005 ஆண்டு சேலம் ஆடைகளுக்கு புவிசார் குறியீடு தந்துள்ளது. [1]

2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ம் நாள் சேலம் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டது.[2] 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்திய ஒன்றிய அரசு சேலம் ஆடைகளுக்கு புவிசார் குறியீடு தந்துள்ளது. [2]


சேலம் துணிகளின் சிறப்பம்சங்கள் தொகு

சேலம் துணிகளின் தனித்துவம் உற்பத்தி செயல்முறைகளில் உள்ளது. நூலை வேகவைத்தல் முதல் செயல்முறையாகும். நூலை வேகவைக்க இராசயனங்களான சோடா சாம்பல், சோப்பு எண்ணெய் போன்றவற்றை தண்ணீரில் சேர்க்கின்றனர். நூலின் இயற்கையான நிறமும், வெளியிட வேண்டிய நூலின் நிறத்திமும் கவனிக்கப்பட்டு இரசாயனங்களின் கலவை தயார் செய்யப்படுகிறது. இதில் நூல் வேகவைத்த பிறகு அதன் நிறத்தை உறிஞ்சும் பண்பு மேம்படுகிறது.

இரண்டவது செயல்பாடாக நூலை வெண்மையாக்குதல் நடைபெறுகிறது. குளோரின், ஹைட்ரஜன் பெராக்சைடு, என்சைம்கள் கொண்டு நூலை வெண்மையாக்கும் பணி நடக்கிறது. இதனால் நூலின் ‌இயற்கை நிறமான சாம்பல் நிறம் அற்றுப்போகிறது.

சேலம் துணிகள் உருவாக்கத்தில் மூன்றாவது நிலை நூலை இரட்டிப்பு ஆக்குவதாகும். இரண்டு ஒற்றை நூல்களை முறுக்கி ஒரே நூலாக மாற்றுகின்றனர். இதன் காரணமாக நூலின் வலிமை மற்றும் ஆயுள் மேம்படுத்தப்படுகிறது. தேவையான அளவிற்கு நூல் கண்டாக சுற்றப்படுகிறது.

இறுதி நிலையான தறி ஓட்டுதலில் நெசவு செய்யும் போதும் நூலில் பசை போன்ற எதுவும் சேர்க்கப்படுவதில்லை. இதனால் வேறெங்கும் இல்லாத வகையில் கலப்படமில்லாத தனித்துவமான ஆடைகள் கிடைக்கின்றன.

புவிசார் குறியீடு விண்ணப்ப விவரங்கள் தொகு

  • விண்ணப்ப எண் - 5
  • விண்ணப்பதாரர் பெயர்- சேலம் ஏற்றுமதியாளர்கள் சங்கம்
  • விண்ணப்பதாரர் முகவரி - சேலம் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 108, சிவனார் மெயின் ரோடு, குகை, சேலம் - 636 006
  • தாக்கல் செய்த தேதி - 12/02/2004
  • பொருட்கள்- கைவினை
  • ஜர்னல் எண் - 6
  • கிடைக்கும் தேதி - 06/06/2005
  • சான்றிதழ் எண் - 11
  • சான்றிதழ் தேதி - 19/09/2005
  • பதிவு செல்லுபடியாகும் காலம் - 11/02/2014

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "All Applications | Geographical Indications | Intellectual Property India". search.ipindia.gov.in.
  2. 2.0 2.1 "Details | Geographical Indications | Intellectual Property India". search.ipindia.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_ஆடை&oldid=3711858" இலிருந்து மீள்விக்கப்பட்டது