சையத் அப்துல் மன்சூர் அபிபுல்லா

இந்திய அரசியல்வாதி

சையத் அப்துல் மன்சூர் அபிபுல்லா (Syed Abdul Mansur Habibullah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். எசு.ஏ.எம். அபிபுல்லா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1977 ஆம் ஆண்டு சூன் மாதம் 24 ஆம் தேதி முதல் 1982 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் தேதி வரை மேற்கு வங்க சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்தார் [1] 1969 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக நதன்காட்டு சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1982 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்கத்தில் சட்ட அமைச்சராக இருந்தார் [2] இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) பிரிவில் உறுப்பினராக செயல்பட்டார். [3]

சையத் அப்துல் மன்சூர் அபிபுல்லா
Syed Abdul Mansur Habibullah
சபாநாயகர், மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
1977–1982
உறுப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
1969–1991
தொகுதிநதங்காட்டு சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டத்துறை அமைச்சர்
பதவியில்
1982–1987
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 நவம்பர் 1917
வர்த்தமான்
இறப்பு14 செப்டம்பர் 1996
கொல்கத்தா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
துணைவர்மாக்சுதா காதுன்
உறவுகள்நூர் ஆலம் சவுத்ரி (மருமகன்)
பிள்ளைகள்மம்தாசு சங்கமிதா (மகள்)
கல்விகொல்கத்தா பல்கலைக்கழகம்
இசுக்காட்டிசு பேராலயக் கல்லூரி
வேலைபேராசிரியர், கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் அரசியல்வாதி

இவரது மகள் மும்தாச்சு சங்கமிதா பர்தமான்-துர்காபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இருந்தார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "WEST BENGAL LEGISLATIVE ASSEMBLY". பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
  2. "Habibullah, Syed Abul Mansur - Banglapedia". பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
  3. DE, AMALENDU (1994). "Address of the Sectional President: The Social Thoughts and Consciousness of the Bengali Muslims in the Colonial Period". Proceedings of the Indian History Congress 55: 447–471. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44143397. 
  4. "Mumtaz Sanghamita bio".