சோடியம் ஐதரோசெலீனைடு

வேதிச் சேர்மம்

சோடியம் ஐதரோசெலீனைடு (Sodium hydroselenide) என்பது NaSeH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம், செலீனியம், ஐதரசன் அணுக்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

சோடியம் ஐதரோசெலீனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் பைசெலீனைடு
இனங்காட்டிகள்
12195-50-5 Y
ChemSpider 67024398
InChI
  • InChI=1S/Na.H2Se/h;1H2/q+1;/p-1
    Key: RBRLCUAPGJEAOP-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129628184
  • [Na][SeH]
பண்புகள்
NaSeH
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

சோடியம் போரோ ஐதரைடுடன் செலீனியத்தைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் சோடியம் ஐதரோசெலீனைடை உருவாக்கலாம்:

Se + NaBH4 → NaSeH + BH3(வளிமம்)

சோடியம் ஈத்தாக்சைடுடன் ஐதரசன் செலீனைடைச் சேர்த்து வினைப்படுத்தியும் மாற்று முறையில் இதை தயாரிக்கலாம்:[1]

NaOEt + H2Se → NaSeH + HOEt

சோடியம் ஐதரோசெலீனைடு சேமிப்பிற்காக தயாரிக்கப்படுவதில்லை. மாறாக உற்பத்தி செய்யப்பட்ட உடனேயே பயன்படுத்தப்படுகிறது.

பண்புகள் தொகு

சோடியம் ஐதரோசெலீனைடு நீர் அல்லது எத்தனாலில் கரைகிறது. சோடியம் ஐதரோசெலீனைடு ஈரப்பதமான காற்றில் சோடியம் பாலிசெலினைடு மற்றும் தனிம செலீனியமாக மாற்றப்படுகிறது.

சோடியம் ஐதரோசெலீனைடு சிறிதளவு ஒடுக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.[1]

பயன் தொகு

கரிமத் தொகுப்பு வினைகளில் சோடியம் ஐதரோசெலீனைடு, விளைபொருளில் செலீனியத்தைச் செருகுவதற்கான ஒரு மின்னணு பதிலீட்டு முகவராகப் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Młochowski, Jacek; Syper, Ludwik (2001). "Sodium Hydrogen Selenide". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rs079. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_ஐதரோசெலீனைடு&oldid=3391170" இலிருந்து மீள்விக்கப்பட்டது