சோதனை மூலைமட்டம்

சோதனை மூலைமட்டம் அல்லது மூலைமட்டம் என்பது ஒரு மரத்துண்டு அல்லது உலோகதுண்டினால் ஆன ஒரு கருவி ஆகும். மரத்துண்டினை அளவிடப் பயன்படுத்தப்படும். இந்த கருவியின் ஆங்கிலப்பெயரிலுள்ள சதுரம் (ஆங்:Square) கருவியின் முதன்மைப் பயன்பாட்டை குறிக்கும். சதுரத்தின், செங்கோணத்தின் துல்லியத்தை (90 டிகிரி)யை அளவிடும்; ஒரு தளத்தின் மேற்பரப்பானது நேராக அல்லது அருகிலுள்ள மேற்பரப்புக்கு இணையாக உள்ளதா எனச் சரிபார்க்க உதவுகிறது.[1]

மூலைமட்டம்

இது கட்டிட மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகிறது.[2] இது பாரம்பரியமாக எக்கினாலான பரந்த கத்தியை மரச்சட்டத்தினுள் பொருத்திவைத்து உருவாக்கப்படுகிறது. தேய்மானத்தினை தடுக்கும்வண்ணம் மரச்சட்டத்தின் உட்பகுதி பித்தளையினால் ஆக்கப்பட்டிருக்கும். நவீன மூலைமட்டமானது முழுவதுமாக உலோகத்தினால் செய்யப்பட்டிருக்கும்.[2]

சான்றுகள் தொகு

  1. Garrett, Hack; Sheldon, John S (1999). Classic Hand Tools. Newtown, CT: Taunton Press. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1561582735.
  2. 2.0 2.1 http://www.technologystudent.com/equip1/try1.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதனை_மூலைமட்டம்&oldid=3582202" இலிருந்து மீள்விக்கப்பட்டது