சௌராட்டிர வெள்ளம், 2021

சௌராட்டிர வெள்ளம், 2021 என்பது செப்டம்பர் 2021-ல் கனமழையைத் தொடர்ந்து, இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் சௌராட்டிரா பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதன் விளைவாகக் குறைந்தது ஆறு பேர் இறந்தனர்.

சௌராட்டிர வெள்ளம் 2021
அமைவிடம்சௌராட்டிர நாடு, குசராத்து, இந்தியா
இறப்புகள்6

வெள்ளம் தொகு

செப்டம்பர் 12, 2021-ல் முதல், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகத் மற்றும் சௌராட்டிராவின் மாவட்டங்கள் குறுகிய காலத்தில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக வெள்ளம் ஏற்பட்டது. பல சாலைகள் சேதமடைந்து பல கிராமங்களுக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டது.[1][2] இந்த மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றும் மற்றும் 18 மாநில நெடுஞ்சாலைகளும் வெள்ளப் பாதிப்பின் காரணமாகப் போக்குவரத்திற்கு மூடப்பட்டன.[2]

நிவாரணம் மற்றும் மீட்பு தொகு

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய வான்படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவற்றின் பணியாளர்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்கள் ஜாம்நகர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டன.[3] இந்தியக் கடற்படை உதவிக்காக ஆறு குழுக்களையும், ஐஎன்எஸ் வல்சுராவிலிருந்து குழுக்களையும் அனுப்பியது.[1] 7000க்கும் மேற்பட்டோர் வெள்ளப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் 200 பேர் மீட்கப்பட்டனர்.[1][2] செப்டம்பர் 2021-ல் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் குறைந்தது ஆறு பேர் இறந்தனர்.[4]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Maniar Ghanghar, Gopi; Negi, Manjeet (2021-09-14). "Over 7,000 evacuated from flood-hit areas in Gujarat; NDRF, Navy carry out relief ops". India Today. Archived from the original on 14 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
  2. 2.0 2.1 2.2 Mehrotra, Vani (2021-09-14). "Gujarat: Heavy rains lash Rajkot, Jamnagar; over 200 rescued, 7,000 shifted to safer places". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
  3. Maniar Ghanghar, Gopi (2021-09-13). "NDRF rescues 31 stranded in Kalavad as floods ravage Gujarat's Jamnagar". India Today. Archived from the original on 13 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
  4. "Gujarat: Six dead in Saurashtra monsoon mayhem, nearly 5,000 shifted | Ahmedabad News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 2021-09-14. Archived from the original on 14 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌராட்டிர_வெள்ளம்,_2021&oldid=3687028" இலிருந்து மீள்விக்கப்பட்டது