ஜகதீஷ் சுவாமிநாதன்

ஜெ. சுவாமிநாதன் (Jagdish Swaminathan) (21 சூன் 1928 - 1994) என அழைக்கப்படும் ஜெகதீஷ் சுவாமிநாதன் ஒரு கவிஞரும் , எழுத்தாளருமாவார். [1] இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கலைஞர்களில் ஒருவரான இவர், 1982ஆம் ஆண்டில் போபாலில் ஒரு கலை வளாகமான பாரத் பவனை நிறுவுவதில் கருவியாக இருந்தார். மேலும் 1990 வரை அதன் ரூபங்கர் கலை அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் அறியப்பட்ட நவீன கால கோண்டு பழங்குடிக் கலைஞரான ஜங்கர் சிங் ஷியாம் என்பவரை இவர் வெளிக் கொணர்ந்தார்.

சுயசரிதை தொகு

சுவாமிநாதன் 1928 சூன் 21 அன்று சிம்லாவில் பிறந்தார். தில்லியில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, இவர் ஒரு முன் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். ஆனால் பாடத்தை முடிக்காமல் கொல்கத்தாவுக்கு சென்று அங்கு சிறு சிறு பணிகளை செய்தார். பின்னர் தில்லி திரும்பி, இந்தி சிறுகதை இதழின் துணை ஆசிரியராகவும், பின்னர் மஸ்தூர் ஆவாஸ் பத்திரிகையின் ஆசிரியராகவும் பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் காங்கிரசு சோசலிச கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் 1948 இல் இந்தியாவின் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.

தொழில் தொகு

தில்லியில் கலைஞர்கள் சைலோஸ் முகர்ஜி, பாபேஷ் சந்திர சன்யால் ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றார். இருப்பினும், பகல் நேரங்களில் பணியாற்றிக்கொண்டு இரவு நேரத்தில் கலை வகுப்பகளைத் தொடர முடியாமல் இவர் கலை வகுப்புகளை விட்டு வெளியேறினார். 1957 இல், வார்சாவில் உள்ள நுண்கலை கழகத்தில் சேர்ந்தார். 1960இல் இந்தியா திரும்பியதும், இவர் தனது முதல் பெரிய கண்காட்சியை நடத்தினார். கலைஞர்கள் பி. கே.ரசாதன் மற்றும் என். தீட்சித் ஆகியோருடன் தனது வரைகலை அச்சு மற்றும் எண்ணெய் ஓவியங்களை காட்சிப்படுத்தினார். 1960களின் முடிவில், கலையை முழுநேரமாக எடுத்துக் கொள்ள பத்திரிகையை விட்டுவிட்டார். [2]

ஆகத்து 1962இல் குசராத்தின் பவநகரில் நிறுவப்பட்ட "குருப் 1890" என்ற குறுகிய காலமே இருந்த கலைஞர் குழுவின் 12 இணை நிறுவனர்களில் இவரும் ஒருவர். குழுவின் மற்ற உறுப்பினர்களில் குலாம் முகமது சேக், எரிக் போவன், ஜோதி பட் ஆகியோரும் அடங்குவர். [3] "பாரம்பரிய நுமனுக்கு சமகால கலைக்கு முக்கியத்துவம்" குறித்த ஆராய்ச்சிக்காக இவருக்கு 1968இல் ஜவகர்லால் நேரு உதவித்தொகை வழங்கப்பட்டது. [4]

ஜங்கர் சிங் ஷியாம் தொகு

கோண்டு மற்றும் பில் போன்ற பழங்குடியினரிடமிருந்து வடமொழி ஓவியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற உதவுவதில் சுவாமிநாதன் தீவிரமாக இருந்தார். 1981ஆம் ஆண்டில், இவர் வீட்டின் மண் சுவர்களில் வரையும் இளம் கோண்டு கலைஞர் ஜங்கர் சிங் ஷியாம் என்பவரை கண்டுபிடித்தார். அவர் முதல் அறியப்பட்ட நவீன கோண்டு கலைஞரானார். [5] இவரது திறமையை உணர்ந்து சுவாமிநாதன் அவரை நகரத்திற்கு அழைத்துச் சென்று ஷியாமின் ஓவியங்களின் கண்காட்சிகளை நடத்தினார். ஷியாம் விரைவில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். மேலும், அவரது ஓவியங்கள் சப்பான், ஐக்கிய இராச்சியம், அமெரிக்காவில் உள்ள கண்காட்சிகளில் சேர்க்கப்பட்டன. 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட போபாலின் பலகலை வளாகமான பாரத் பவன் மற்றும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்குடி கலைகளின் தொகுப்புக்கு சுவாமிநாதன் உதவினார். [6] [7]

2007 ஆம் ஆண்டில், சுவாமிநாதனின் பெயரிடப்படாத ஒரு படைப்பு இங்கிலாந்தின் ஏல நிறுவனமான கிறிஸ்டியில் $312,000க்கு ஏலம் விடப்பட்டது. [8]

நூலியல் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The blue chips: Top Indian painters: MF Husain, Tyeb Mehta, SH Raza, J Swaminathan, VS Gaitonde". India Today. 17 April 2006. பார்க்கப்பட்ட நாள் 12 May 2013.
  2. "Life and Times of J. Swaminathan". IGNCA, Newsletter. April–June 1994. Archived from the original on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2013.
  3. "Twelve Men and a Short-lived Idea". Art India. 3 March 2012. Archived from the original on 29 March 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2013.
  4. "Official list of Jawaharlal Nehru Fellows (1969-present)". Jawaharlal Nehru Memorial Fund.
  5. "A Vision Of Fundamental Harmony". http://www.telegraphindia.com/1130511/jsp/opinion/story_16849556.jsp#.UY_GMaJTCHg. 
  6. "Untitled, it depicts personal spaces". http://www.telegraphindia.com/1091026/jsp/calcutta/story_11656806.jsp. 
  7. Udyan Vajpeyi: "Jangarh Kalam - Narrative of a tradition - Gond Painting". Madhya Pradesh, India: Tribal Welfare Department. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-903764-3-8.
  8. "Indian art fetches big sales for Christie's". http://articles.economictimes.indiatimes.com/2007-03-23/news/27685952_1_contemporary-indian-art-souza-s-untitled-anju-dodiya. 

மேலும் படிக்க தொகு

  • Prayag Shukla, J.Swaminathan - Ek Jeevani, a biography in Hindi published by Raza Foundation, Raj Kamal Prakashan,New Delhi 2019

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதீஷ்_சுவாமிநாதன்&oldid=3118848" இலிருந்து மீள்விக்கப்பட்டது