ஜான் எட்வின் லூக்கே


ஜான் எட்வின் லூக்கே (John Edwin Luecke) என்பவர் ஒரு அமெரிக்கக் கணிதவியலாளர் ஆவார். இவரது பணிகள் இடவியல் மற்றும் முடிச்சுக் கணிதம் அல்லது முடிச்சு கணித கருத்தியல் கோட்பாடுகள் பற்றியதாகும். இவர் 1985 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தை ஆஸ்டின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றார். மேலும் இதே நிறுவனத்தில் தற்போது கணிதத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஜான் எட்வின் லூக்கே
தேசியம்அமெரிக்கர்
துறைஇடவியல், முடிச்சுக் கணிதம்
கல்வி கற்ற இடங்கள்டெக்சாஸ் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்கேமரூன் கார்டன்
அறியப்படுவதுகார்டன் - லுக்கே தேற்றம்

பணிகள் தொகு

லூக்கே, முடிச்சு கணிதத்திலும் 3-பன்மடிவெளியிலும் சிறந்த வல்லுநராவார்.[1] மார்க் குல்லேர், கேமரூன் கார்டன், பீட்டர் சாலே ஆகியோருடன் இணைந்து, இவர் 'சுழற்சி அறுவை சிகிச்சை தேற்றத்தை' 1987 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் நிரூபித்தார்.[2] 1989 ஆம் ஆண்டின் அறிக்கையில், லூக்கேயும் கேமரூன் கார்டனும் முடிச்சுகள் அவற்றின் நிரப்பிகளால் தீர்மானிக்கப்படுகிறது என்ற முடிவினை நிறுவினர். இந்த முடிவானது தற்போது 'கார்டன்-லூக்கே தேற்றமென' அறியப்படுகிறது.

முனைவர் லூக்கே‌ 1992 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இளம் புலனாய்வாளர் விருதை பெற்றார்.[3][4] மேலும் 1994 ஆம் ஆண்டில் சிலோன் நிறுவனத்தின் ஆய்வாளராகவும் இருந்தார். இவர் 2012 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கணிதச் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[5]

சான்றுகள் தொகு

  1. M. Culler, C. Gordon, J. Luecke, P. Shalen (1987). Dehn surgery on knots. The Annals of Mathematics (Annals of Mathematics) 125 (2): 237-300.
  2. Cameron Gordon and John Luecke, Knots are determined by their complements. J. Amer. Math. Soc. 2 (1989), no. 2, 371–415.
  3. The University of Texas at Austin; Faculty profile பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
  4. NSF Presidential and Honorary Awards
  5. List of Fellows of the American Mathematical Society, retrieved 2013-02-02.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_எட்வின்_லூக்கே&oldid=3816184" இலிருந்து மீள்விக்கப்பட்டது