ஜான் பிளேம்சுடீடு

ஆங்கிலேய வானியலாளர், முதல் அரசு வானியலாளர்

ஜான் பிளேம்சுடீடு (John Flamsteed) FRS (19 ஆகத்து 1646 - 31 திசம்பர் 1719) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் முதல் அரசு வானியலாளரும் ஆவார். இவர் 3000 விண்மீன்களுக்கு மேலாகப் பட்டியலிட்டார்.[1]

ஜான் பிளேம்சுடீடு
John Flamsteed
காட்ஃபிரே நெல்லர் வரைந்த ஜான் பிளேம்சுடீடு, 1702
பிறப்பு19 ஆகத்து 1646
டெம்பை, டெர்பிசயர், இனங்கிலாந்து
இறப்பு31 திசம்பர் 1719 (அகவை 73)
பர்சுடோவ், சரே, இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்இயேசு கல்லூரி, கேம்பிரிட்ஜ்
அறியப்படுவதுமுதல் அரசு வானியலாளர்
பின்பற்றுவோர்ஜோசப் கிராசுத்வெய்ட்
ஆபிரகாம் சார்ப்
துணைவர்மார்கரெட்

வாழ்க்கை தொகு

பிளேசுடீடு இங்கிலாந்தில் உள்ள டெர்பிசயரின் டென்பையில் பிறந்தார். இவரது தந்தi சுட்டீபன் பிளேம்சுடீடு. இவரது தாயார் மேரிசுபாடுமன். இவர் டெர்பையில் உள்ள இலவசப் பள்ளியில் படித்தார். பிறகு டெர்பையின் புனித பீட்டர் பேராயத்தின் டெர்பை பள்ளியில் கல்விகற்றார். இவரதுப் தந்தயார் இப்பள்ளிக்கு அருகில் அரைவை ஆலை வைத்திருந்தார். அப்போது பெரும்பாலான பள்ளி ஆசிரியர்கள் தூய்மைவாதிகளாக இருந்தனர். அன்றைய இலக்கியம் படிக்க தேவையான இலத்தீனில் பிளேம்சுடீடு நல்ல புலமை பெற்றிருந்தார். வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிக்கல்வியை இவர் 1662 மேவில் முடித்துள்ளார்.[2]:3–4

இவருக்கு டெர்பை பள்ளி ஆசிரியர் கேம்பிரிட்ஜில் உள்ள இயேசு கல்லூரிக்கு பரிந்துரை செய்திருந்தும் தொடர்ந்த உடல்நலமின்மையால் சில ஆண்டுகள் காலந்தாழ்த்தி சேர வேண்டியதாயிற்று. இந்நிலையில் இவர் தந்தையாரின் வணிகத்துக்கு உதவி செய்துள்ளார். இவரது தந்தையார் இவருக்கு எண்ணியலில் பயிற்சி தந்துள்ளார். பதின்ம எண் பயிற்சியும் அளித்துள்ளார். இது இவருக்கு கணிதவியலிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வத்தைத் தந்துள்ளது. இவர் 1662 ஜூலையில் பதின்மூன்றாம் நூற்றாண்டு யொகான்னசு தெ சாக்ரொபோசுகோ அவர்களின் De sphaera mundiஎனும் நூலை ஆர்வமுடன் படிக்கத் தொடங்கியுள்ளார்..இவர் 1662 செப்டம்பர் 12 இல் முதல்சூரிய ஒளிமறைப்பை நோகியுள்ளார். 1663 தொடக்கத்தில் தாமசு பேல் அவர்களின் . The Art of Dialling எனும் நூலை படித்தார். இது இவருக்குச் சூரியக்கடிகையில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இவர் 1663 கோடையில், இவர் விங்கேட் அவர்களின் Canon எனும் ந்நுலையும் வில்லியம் ஆகுடிரெடின் Canon எனும் நூலையும் தாமசு சுட்டிரப்பின் Art of Dialling எனும் நூலையும் படித்துள்ளார். அத்ர்ர்நேரத்தில் தாமசு சுட்டிரீட்டின் Astronomia Carolina, அல்லது வான்கோள இயக்கங்களுக்கான புதிய கோட்பாடு எனும் நூலும் கரோலின் அட்டவணைகளும் இவருக்குக் கிடைத்துள்ளது). இவர் தம் சூழலில் இருந்த வானியலாளர்களோடு தொடர்பு வைத்திருந்தார். இவரில் வில்லியம் இலிட்ச்போர்டும் அடங்குவார். இலிட்ச்போர்டின் நூலகத்தில் ஜான் காடுபரியின் வானியல் அட்டவணைகள் உள்ள கணிய நூலும் செருமையா அராக்சு அவர்களின் வானியல் அட்டவணைகளும் இருந்தன. செருமையா தன்22 ஆம் அகவையிலேயே 1641 இல் இறந்துவிட்டார். நியூட்டனைப் போலவே இவரும் செருமையா அராக்சு அவர்களின் நூலைப் பெரிதும் உயர்வாக்க் கருதியுள்ளார்.[2]:8–11

மேற்கோள்கள் தொகு

  1. Chambers, Robert (1864) Chambers Book of Days
  2. 2.0 2.1 Birks, John L. (1999) John Flamsteed, the first Astronomer Royal. London, Avon Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7503-0147-3

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

வார்ப்புரு:EB1911 poster

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பிளேம்சுடீடு&oldid=2698692" இலிருந்து மீள்விக்கப்பட்டது