ஜாம் ஜாம் (திரைப்படம்)

ஜாம் ஜாம் (Zam Zam) [1]என்பது ஜி. நீலகண்ட ரெட்டி இயக்கி, மனு குமாரன் மற்றும் தைசூன் கோராகிவாலா தயாரித்த ஒரு வெளியிடப்படாத இந்திய மலையாள மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். [2][3]விகாஸ் பால் இயக்கிய 2014 இந்தி திரைப்படமான குவீன் (இந்தி) திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இத்திரைப்படத்தில் மஞ்சிமா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜாம் ஜாம்
இயக்கம்ஜி. நீலகண்ட ரெட்டி
தயாரிப்புமனு குமரன்
இசைஅமித் திரிவேதி
நடிப்புமஞ்சிமா மோகன்
சிபானி டாண்டேகர்
சன்னி வாய்னே
முத்துமணி
பைஜு சந்தோஷ்
ஒளிப்பதிவுமைக்கேல் டாபுரியக்சு
படத்தொகுப்புபிரதீப் சங்கர்
கலையகம்மீடியென்டே இன்டர்நேஷனல் ஃபிலிம்சு லிட்
லிகர் கமர்சியர் புரோக்கர்ஸ்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள் தொகு

  • ஜமா நஸ்ரீனாக மஞ்சிமா மோகன்
  • ஜமா ஃபர்சில் கதாபாத்திரத்தில் ஷிபானி தண்டேகர்
  • கேப்டன் பிஜுமோனாக சன்னி வெய்ன்
  • முத்துமணி-கவிதா கார்த்திகேயனி
  • சாக்கோச்சன் நாயராக பைஜு

தயாரிப்பு தொகு

குவீன் 2014 என்ற இந்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், தங்கள் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்புகளுக்கான மறு ஆக்க உரிமைகளை தியாகராஜனுக்கு விற்றுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தியாகராஜன் தனது தயாரிப்பு ஸ்டுடியோ ஸ்டார் மூவிஸ் மூலம் படங்களை உருவாக்குவார். [4] படத்தின் முதன்மைப் படமெடுக்கும் பணி சூன் 8,2017க்குள் தொடங்கப்பட வேண்டும், இல்லையெனில் உரிமையை மீண்டும் வயாகாம் நிறுவனத்திற்குத் திருப்பித் தர வேண்டும் என்று வயாகாம் ஒரு ஒப்பந்தத்தில் கூறியிருந்தது.

தொடக்கத்தில், அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், அவருக்கு பதிலாக மஞ்சிமா மோகன் நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Queen's Malayalam remake titled Zam Zam, Manjima Mohan to step into Kangana Ranaut's shoes". 27 September 2017 இம் மூலத்தில் இருந்து 12 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180912093539/https://indianexpress.com/article/entertainment/malayalam/queens-malayalam-remake-titled-zam-zam-manjima-mohan-to-step-into-kangana-ranauts-shoes-4863661/. 
  2. Priyanka Thirumurthy (15 December 2017). "My favourite scene from 'Zam Zam' is when I get drunk: Manjima Mohan to TNM" இம் மூலத்தில் இருந்து 12 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180912130932/https://www.thenewsminute.com/article/my-favourite-scene-zam-zam-when-i-get-drunk-manjima-mohan-tnm-73202. 
  3. "Manjima Mohan and Sunny Wayne wrap up Zam Zam's final schedule - Times of India". 27 July 2018 இம் மூலத்தில் இருந்து 3 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190403194110/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/manjima-mohan-and-sunny-wayne-wrap-up-zamzams-final-schedule/articleshow/65160496.cms. 
  4. "Thiagarajan bags rights to remake 'Queen' down south". The Hindu. 11 June 2014 இம் மூலத்தில் இருந்து 3 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211203114304/https://www.thehindu.com/entertainment/thiagarajan-bags-rights-to-remake-queen-down-south/article6104057.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்_ஜாம்_(திரைப்படம்)&oldid=3905385" இலிருந்து மீள்விக்கப்பட்டது