ஜாம் மினார்

ஆப்கானிஸ்தானில் உள்ள கோபுரம்

ஜாம் மினார் என்பது, மேற்கு ஆப்கானிசுத்தானில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த "மினார்" ஆகும். இது, அந்நாட்டின் கோர் மாகாணத்தின் சாராக் மாவட்டத்தில் |அரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2400 மீட்டர்கள் வரையிலான உயரங்களைக் கொண்ட மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள 65 மீட்டர் உயரமான இந்தக் கோபுரம் (மினார்) முழுவதுமாகச் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக் கோபுரத்தில் மிக நுணுக்கமான செங்கல், சாந்து, மினுக்கிய ஓட்டு வேலைப்பாடுகள் அமைந்துள்ளன.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஜாமின் மினாரும் தொல்லியல் எச்சங்களும்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
The Minaret of Jam and Qasr Zarafshan, August 2005
வகைபண்பாடு
ஒப்பளவுii, iii, iv
உசாத்துணை211
UNESCO regionஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்
- ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2002 (26 ஆவது தொடர்)
ஆபத்தான நிலை2002-

கிபி 11 ஆம் நூற்றாண்டுக்கும் 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்ட இந்த மினார், பல நூற்றாண்டுகளாக வெளியுலகுக்குத் தெரியாமல் மறைந்திருந்தது. 1886 ஆம் ஆண்டில், சர். தாமசு ஓல்டிக் (Thomas Holdich) என்பார் இதனைக் கண்டுபிடித்துத் தெரியப்படுத்தினார். எனினும், 1957 ஆம் ஆண்டில் ஆந்திரே மாரிக் (André Maricq) என்னும் பிரான்சு நாட்டுத் தொல்லியலாளரரின் ஆய்வுகள் மூலமாகவே இது வெளியுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

2002 ஆம் ஆண்டில் இது ஒரு உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.

படங்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்_மினார்&oldid=3388289" இலிருந்து மீள்விக்கப்பட்டது